கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் மன்னாரில் இடம் பெற்றது. இவ் அமர்வுகளில் மிகக் குறைந்தளவானோருக்கே சாட்சியமளிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
மன்னார் கச்சேரியில் இடம் பெற்ற அமர்வில் 600 பேருக்கு மேல் சாட்சியமளிக்க வந்திருந்த போதும் 10 பேர் மட்டுமே சாடசியமளித்தனர். அதே போல மன்னார் அடம்பனில் 2000 ஆயிரம் பேர் வரை சாட்சியமளிக்க வந்திருந்த போதும் 10 பேர் மட்டுமே சாட்சியமளித்தனர். ஏனையவர்களின் சாட்சியம் அறிக்கையாகப் பெறப்பட்டது. மன்னர் மறைமாவட்ட ஆயர் எழுத்து மூலம் கேட்டுக்கொண்டதன் பிரகாரமே ஆணைக்கு அமர்வுகளை மன்னாரில் நடாத்தியது.
இ
வ்வமர்வில் மன்னார் ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை சாட்சியமளித்திருந்தார். தனது சாட்சியத்தில் கொடுக்கப்பட்ட அமர்வுக்கான காலம் போதாமானதல்ல என்பதனைத் தெரிவித்திருப்பதுடன், இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம் தமிழர் பிரச்சினையை அரசுகள் கையாண்ட முறைகளே எனவும் தெரிவித்திருக்கிறார். அத்துடன் கடந்த கால சம்பவங்களின் உண்மைத் தன்மையை அறிக்கையிடுவதும் ஏற்றுக் கொள்வதும் இன்றியமையாதது எனவும் தெரிவித்திருக்கிறார்.உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய விடயங்கள் பலவற்றையும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.