இந்தியாவில் அகதிகளாக வாழ்ந்துவரும் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்ற
யுத்த சூழல் காரணமாக இலங்கையிலிருந்து வெளியேறியவர்கள் தாய்நாடு திரும்பும் ஒரு சூழலை இலங்கையில் உருவாக்குவதே முக்கியம் என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியாவில் அகதிகளாக வாழும் இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் இந்தியக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என அண்மையில் சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் கூறிய கருத்து தமக்கு ஏற்புடையது அல்ல என்று மனோ குறிப்பிட்டுள்ளார்.
20 வருடங்களுக்கு மேலாக இந்திய மற்றும் தமிழ் நாட்டு அரசுகளால் அடிப்படை மனித உரிமைகளைக்கூட மீறும் வகையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத் தமிழர்களின் புதிய சந்ததி தமிழ் நாட்டின் கலாச்சர வரம்புகளுக்குள் வளர்ந்தவர்கள். அவர்கள் தமிழ் நாட்டு உழைக்கும் மக்களின் ஒரு பகுதி. மேலும் அவர்கள் எங்கு வாழ்வது என்பதை அவர்களே முடிவெடுக்க வேண்டும். எவ்வாறு மலையகத் தமிழர்களும் ஈழத் தமிழர்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறோமோ அதே போன்றே அகதிகளின் புதிய அடையாளத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
முப்பது வருடங்களுக்கு மேலாக இந்தியாவிலேயே வாழ்ந்து கல்விகற்று மணமுடித்து இலங்கையையே கண்டறியாத தமிழர்களை எல்லாம் இந்தியக் குடியுரிமை பெறக் கூடாது என மனோ கணேசன் எப்படிக் கூறலாம். 90 களிலிருந்து ஐரோப்பிய நாடுகளை நோக்கிப் புலம் பெயர்ந்த தமிழர்களில் பெரும்பாலானோர் அந்த நாடுகளின் குடியுரிமையைப் பெற்றுள்ளனர். அவர்களை நோக்கி மனோ கணேசன் இதுவரை இந்தக் கோரிக்கையை முன்வைக்கவில்லையே. இந்து சாமியாரும் பாசிச ஜெயலலிதாவின் அடியாளுமான சாமியார் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் என்ற ஆசாமிக்கோ மனோ கணேசனுக்கோ இடம் பெயர்ந்த தமிழர்கள் குறித்து முடிவெடுக்க எந்த உரிமையும் கிடையாது.