பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் மதுரைக்குள் நுழைவற்கு மதுரை கலெக்டர் அன்சுல் மிஸ்ரா விதித்த தடையை எதிர்த்து ஐகோர்ட்டில் ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீது விதிக்கப்பட்ட உத்தரவிற்கு தடை விதிக்க ஐகோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. தமிழக அரசின் விளக்கம் வந்த பிறகே ராமதாஸ் மனுகுறித்து முடிவு செய்யப்படும் என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. மேலும் இவ்வழக்கு தொடர்பான விசாரணையை ஜனவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பால்வசந்தகுமார் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே ஆதிக்க சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
மற்றவர்களும்.ஒவ்வொரு கூட்டத்திலும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருகிறார்கள்.
பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதற்காக மதுரை மாவட்டத்துக்குள் பிப்ரவரி 21-ந் தேதி வரை பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நுழைய மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.மதுரையில் சாதி சங்கங்களை ஒருங்கிணைத்து காதல் திருமணங்களை எதிர்த்தும் தலித்துகளை விமர்சித்தும் சாதி மோதலை தூண்டும் வகையில் பேசியதால், மாவட்டத்துக்குள் நுழைய உங்களுக்கு ஏன் தடை விதிக்கக் கூடாது? என்று ராமதாஸுக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்த நோட்டீஸுக்கு எதிர்ப்பு தெரிவித்த ராமதாஸ், வழக்கறிஞர்கள் மூலம் பதில் அளித்திருந்தார்.இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்துக்குள் நுழைய ராமதாஸ் உள்ளிட்ட சாதித் தலைவர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.தற்போது பிப்ரவரி 21-ந் தேதி வரை மதுரை மாவட்டத்துக்குள் நுழையவும் ராமதாஸுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.மேலும் ராமதாஸுக்கு தடை விதிப்பது தொடர்பாக மற்றொரு நோட்டீஸையும் அனுப்பி அனுப்பியிருந்தார். மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா.