வாஷிங்டனில் அமெரிக்க அயலுறவு அமைச்சகத்தில் நடந்த செய்தியாளர்கள் மாநாட்டில் பேசிய அமெரிக்க அரசின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் பிரச்சனைகள் ஆகியவற்றிற்கான செயலர் மைக்கேல் போஸ்நர் இவ்வாறு கூறியுள்ளார்.
“உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு அது. மனித உரிமைப் பிரச்சனைகளை அதிகம் சந்திக்கும் நாடும் அதுவே. அது குறித்து நமது கவலைகளை அவர்களுக்குத் தெரிவிப்போம். இந்த அரசிடன் அது குறித்து கேள்வி எழுப்புவோம்” என்று மைக்கேல் போஸ்நர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் மனித உரிமை மீறல்கள் பலதரப்பட்டவை. அவற்றின் விவரங்களில் ஆழமாக செல்லப்போவதில்லை. இந்தியாவை நமது மிக முக்கியமான நண்பனாகவும், கூட்டாளியாகவும் மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார்.