புரட்சிகரத் தோழர்களையும் மார்க்கிசியப் பேராசான் மார்க்சையும் மிக மோசமான முறையில் இழிவு படுத்தி லீனா மணிமேகலை மட்டகரமான கவிதை ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு வினவு தோழர்கள் எதிர்வினையாற்றியிருந்தார்கள். இதற்கிடையில் இந்து மக்கள் கட்சி லீனாவுக்கு எதிராக தமிழக காவல்துறையிடம் புகார் மனு ஒன்றை வழங்கியது. பாசிச இந்து மக்கள் கட்சிக்கு தமிழகத்தில் செல்வாக்கு ஏதும் இல்லை. இந்நிலையில் லீனா மணிமேகலைக்கு ஆதரவாக மனித உரிமை வாதி என்று தன்னைத் தானே கூறிக் கொள்ளும் அ.மார்க்ஸ் ஒரு அரங்கங்கக் கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்திருந்த நிலையில் ராஜன்குறை, அ.மார்க்ஸ், சுகுணாதிவாகர், லீனா உட்பட இன்னும் சிலரைத் தவிற வேறு எவரும் லீனாவுக்காக வரவில்லை. மக்கள் கலை இலக்கியக் கழகத் தோழர்கள் நாற்பது பேர் அக்கூட்டத்திற்குச் சென்றிருந்தனர். கூட்டம் தொடங்கியதும் அ.மார்க்ஸ்சிடம் ஜனநாயக ரீதியிலும் அமைதியாகவும் தோழர்கள் சில கேள்விகளைக் கேட்டனர். கேள்வி கேட்கும் உரிமையை மறுத்த மார்க்ஸ். தொடர்ந்து பேசுமாறு ராஜன்குறையை அழைத்தார். லீனாவிடம் சில தோழர்கள் கேள்வி எழுப்பியதுமே அவர் பயங்கர உஷ்ணமாகி விட்டார். கடுமையான ரத்தக் கொதிப்பு நோயால் பாதிக்கப்பட்டுள்ள லீனாவுக்கு பிளட்பிரஷர் எகிற அ.மார்க்ஸ் முன்னிலையில் தோழர்களை கையோ ஓங்கியபடி அடிக்கப் பாய்ந்து விட்டார். ஜனநாயக ரீதியில் கேள்விகளை எழுப்ப வந்த தோழர்கள் அதிர்ந்து போய் அமைதியாகி. ராஜன் குறையை நோக்கி சில கேள்விகளை வீச அ.மார்க்ஸ் உடனே அரங்கத்தை விட்டு வெளியே போங்கள் என்று டென்ஷனாகி கத்த ஆகப்பெரிய ஜனநாயகவாதியின் அஹிம்சை முகத்தைக் கண்ட தோழர்கள் ஜனநாயக ரீதியில் கோஷமிட்டபடி அரங்கை விட்டு வெளியேறினார்கள்.
-சென்னையிலிருந்து மாறன்-