Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித உரிமையை மீட்கும் இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விரும்புகிறோம்

uslankaஇலங்கையில் அமைதியும் ஜனநாயகமும் மீளமைக்கப்பட்டு மனித உரிமையும் மீட்கப்பட்டுள்ளதால்  இலங்கை ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. கடந்த வாரம் இலங்கையின் மனித உரிமை மீறல் தொடர்பாக வெளிவந்த அறிக்கை 2014 ஆம் ஆண்டுக்கானதே தவிர 2015 ஆம் ஆண்டுக்குரியது அல்ல என இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது.

அதே வேளை இலங்கையின் இனக்கொலையை இராணுவரீதியாகத் தலைமை தாங்கி படுகொலைகளை வழி நடத்திய சரத் பொன்சேகாவை தனது கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிடுமாறு ‘நல்லாட்சி’ ஜனதிபதி மைத்திரிபால சிரிசேன அழைப்பு விடுத்துள்ளார்.

இனப்படுகொலையின் பின்னணியில் செயற்பட்ட அமெரிக்க அரசு தனது அடியாளான மைத்திரிபால சிரிசேனாவை ஆட்சியிலமர்த்தியுள்ளது. மறு புறத்தில் போர்க்குற்ற விசாரணை என்ற நாடகத்தை ஐ.நாவில் அதன் அடியாள் அமைப்புக்களுடன் நடத்திவருகிறது. இவற்றின் ஊடாக உலகின் மிகப்பெரும் இனப்படுகொலைகளில் ஒன்றான வன்னிப் படுகொலைகளை மூடி மறைத்து மனித் உரிமையைக் குழிதோண்டிப் புதைத்துள்ளது.

Exit mobile version