ஒரு அரசு தான் அதிகாரம் செலுத்துகின்ற மக்களின் மனித உரிமைகளை எவ்வாறு பாதுகாகின்றது என்பதைக் கண்காணிக்கும் நோக்கிலேயே மனித உரிமைக் கண்காணிப்பகம், சர்வதேச மன்ன்னிப்புச் சபை போன்றன உருவாக்கப்பட்டிருந்தன. குறிப்பாக சோவியத் ஏகாதிபத்திய முகாமிற்கு எதிராக உருவாக்கப்பட்ட இவ்வமைப்புகள் இன்று மனித உரிமை மீறல்களை தாம் சார்ந்த அரசுகளின் அரசியல் நகர்வுகளுக்கு ஒப்ப கண்டித்தும் வெளிப்படுத்தியும் வருகின்றன. வன்னிப் படுகொலைகள் நடந்த வேளையில் புலிகளுக்கும் அரசிற்கும் நடைபெறும் யுத்தம் என்றும், மக்களைப் புலிகள் விடுதலை செய்ய வேண்டும் என்றும், பல தடவைகள் இலங்கை அரசைக் கண்டித்தும் இத் தன்னார்வ நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டன. ஒரு வருடம் கடந்த நிலையிலும் எதுவும் நடந்தாகவில்லை. கொல்லப்பட்ட ஐம்பதாயிரம் மனித உயிர்களின் மீது ஆட்சி நடத்திக் கொண்டிருக்கிறார்கள் போர்குற்றவாளிகளான ராஜபக்ச குடும்பம்.
இந்த நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் மற்றுமொரு கோரமான படத்தொகுப்பை வெளியிட்ட்டுள்ளது.
இங்கு மகிழ்ச்சிய்டைய எதுவுமில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இன்றுவரை அது நடைபெறுவதற்கான சாத்தியங்களே தென்படவில்லை. இந்திய சீன அரசுகள் இலங்கைக்கு ஆதரவான அரசியல் நகர்வுகளை மேற்கொள்ளும் சூழலில் அதற்கு ஏற்றவாறு தமது அரசியலை மேற்கு நாடுகளும் நகர்த்திச் செல்கின்றன. இலங்கை அரசு சர்வதேச சமூகத்திடமிருந்து வரும் கண்டனங்களைத் தவிர்க்கவே மனித உரிமை மீறல்களை விசாரிப்பதற்கான ஆணைக்குழுவை நியமித்திருப்பதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவிக்கிறது. இலங்கை அரசின் அதிகாரத்திலிருப்பதே கொலைக் குற்றவாளிகள். இலங்கை இந்திய அரசுகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் ஒன்று தான் இன்னுமொரு முள்ளிவாய்க்காலிலிருந்து மக்களை விடுதலைசெய்யும்.
-எம்.திரு