Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனித உரிமை பேசும் சரத் பொன்சேகா

சரத் பொன்சேகா இராணுவப் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய அனைத்து இடங்களிலும் மனித உரிமை  மீறலும்  இன அழிப்பும் இலங்கையில்  வரலாறு காணாத வகையில் நடைபெற்றுள்ளது. இன்று ஜனாதிபதித் தேர்தலுக்காக இவர் மனித உரிமைவாதியாக உருவெடுத்துள்ளார்.  தவிர, கடந்த வாரம்  அமரிக்கத் தூதர் சரத் பொன்சேகாவைச் சந்தித்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Exit mobile version