Sun Jul 20
தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் சம்பவம் குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சு, இலங்கைத் தூதுவர் சி.பி.ஜெயசிங்கவை நேற்று அழைத்து தமது ஆட்சேபத்தை தெரிவித்துள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கிழக்குப் பிரிவுச் செயலாளர் என். ரவி, இலங்கைத் தூதரை அழைத்து புது டில்லி அரசின் ஆழ்ந்த கண்டனத்தை வெளிப்படுத்தினார்.
இம்மாதம் 12ஆம் திகதி இந்தியக் கடலில்வைத்து இரண்டு தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படை சுட்டுக்கொன்றதா கக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக தமது தரப்பு விசாரணை நடத்தி வருவதாக இலங் கைத் தூதுவர் எடுத்துக் கூறினார். விசார ணையின் முடிவை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று செயலர் ரவி அவரிடம் தெரிவித்திருக்கிறார்.
இந்திய மீனவர்கள் பாதுகாப்புக்கும் அவர்களின் சேமநலன்களுக்கும் முன்னு ரிமை வழங்கப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு. அதனை மனதிற் கொண்டு மனிதாபிமான முறை யில் இலங்கை செயற்பட வேண்டும் என இலங்கைத் தூதுவரை இந்தியச் செயலர் ரவி அறிவுறுத்தினார்