தாக்குதல்கள் ஆரம்பித்த போது முன்னைநாள் வெளிவிவகாரச் செயலாளரும் ரோரிக் கட்சியின் முக்கிய புள்ளியுமான வில்லியம் ஹேக், பாலஸ்தீனியர்களின் தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடிகொடுப்பதில் என்ன தவறு என்று இரத்த வெறியை நியாயப்படுத்தினார். மனிதாபிமானம் தொலைந்துபோன கொலை வெறியர்களின் சமூகமாக உலகத்தின் ஒவ்வொரு மூலையும் மாறி வருகிறது.
கொல்லப்பட்ட 4 வயதுக் குழந்தையின் மீது புரண்டு விளையாடப் பொம்மைகள் வாங்கி வந்திருக்கிறேன் எழுந்திரு என்று புலம்பும் பாலஸ்தீனியத் தந்தையின் காணொளியும் மறுபுறத்தில் அக்கொலைகளை மகிழ்ச்சியாகக் கொண்டாடும் இஸ்ரேலியர்களின் காணொளியும் வெளியாகியுள்ளன.
தாக்குதலுக்கு முன்னேறும் எதிரிகளைக்கூட தற்காப்பிற்காக மட்டுமே கொலை செய்யும் மனிதாபிமானத்தைப் போதித்த போராட்டங்களைக் கடந்துவந்த மனித சமூகம் அமெரிக்க அரசின் தலைமையிலான ஏகாதிபத்தியங்களின் அடியாட்களாகிவிட்ட ஊடகங்கள் போன்ற சாதனங்கள் ஊடாக மனிதர்களை வக்கிரமான உணர்வு படைத்தவர்களாக மாற்றி வருகிறது. காசாவில் கொல்லப்பட்டவர்களின் தொகை கூட அமெரிக்க ஏகாதிபத்திய சார்பு ஊடகங்களால் மட்டுமே வெளியிடப்படுகின்றன. ஐ.நாவும் மன்னிப்புச் சபையும் அதற்கான பொறுப்புக்களை தம் வசம் வைத்துள்ளன. அகண்ட இஸ்ரேல் என்பதை நோக்கமாகக் கொண்டு இனவழிப்புச் செய்யும் இஸ்ரேல் இந்த நூற்றாண்டின் இன்னொரு அவமானம்.
கொலைகளை மகிழ்ச்சியெனக் கொண்டாடும் இஸ்ரேலியர்கள்:
மரணித்த குழந்தையின் உடலில் புரண்டு அழும் தந்தை: