Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘மனிதர்களின் எண்ணிக்கை அளவு கடந்துவிட்டது’

01.04.2009.

பூமியில் உயிரினங்களின் எண்ணிக்கை அளவுகடந்துவிட்டதாக அமெரிக்க நுண்கூற்று உயிரியல் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

டாக்டர். ஃபெடறோஃப் அவர்கள், 2007 ஆம் ஆண்டு முதல் அமெரிக்க அரசுத்துறைக்கு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கிறார்.

ஒபாமாவின் புதிய நிர்வாகத்தில், ஹிலாரி கிளிங்டனின் கீழ் அவர் பணியாற்றுகிறார்.

நுண்கூற்று உயிரியல் பேராசிரியரான அவர், பிபிசி நிகழ்ச்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், எமது புவி மண்டலம், ஏற்கனவே அளவுக்கு அதிககமான உயிரினங்களைக் கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார்.

” எமது பூமி எந்த அளவுக்கு தாக்குப் பிடிக்க முடியுமோ, அந்த எல்லையை நாம் ஏற்கனவே தண்டிவிட்டோம் என்று நான் நினைக்கிறேன். எம்மிடம் இன்னமும் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலங்களையும், குறிப்பாக தண்ணீரையும், நாம் சிறப்பாக நிர்வகிக்க, சமாளிக்க வேண்டும் என்றால், நாம் தொடர்ச்சியாக எமது சனத்தொகையை குறைத்தாக வேண்டும். இதற்கு மேலும் சனத்தொகை வளர்ச்சியை தாக்குப் பிடிக்க எமது பூமியினால் முடியாது என்றார் அவர்.

சிறப்பான நில முகாமைத்துவம் என்பது, மரபணு ரீதியில் மாற்றியமைக்கப்பட்ட உணவுப்பொருட்களையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். – இந்த விடயத்தில் பல விமர்சகர்கள் ஏற்கனவே முரண்பட்டிருக்கிறார்கள்.

புவியை வெப்பமடையச் செய்யும் கரியமில வாயுவின் வெளியேற்றத்தில் தமக்குள்ள பொறுப்பை அமெரிக்கா ஏற்றுக்ககொண்டு விட்டதா என்று கேட்கப்பட்டதற்கு பதிலளித்த டாக்டர். ஃபெடறோஃப், இன்னமும் இல்லை என்று கூறியுள்ளார்.

இருந்த போதிலும், இந்த விடயத்தில் உண்மையில் புரையோடிப்போயிருக்கின்ற பிரச்சினையை நாம் எவரும் சரரியாக விவாதிக்கவில்லை என்றும், எதிர்வரும் மாதங்களில் இதுவிடயத்தில் அமெரிக்கா யதார்த்தமான ஒரு கொள்கையை முன்வைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

BBC

Exit mobile version