காடுவெட்டி குருவைப் பார்த்தால்தான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் பயப்படுகிறார்கள். எனவே ஜாதிக்கொரு காடுவெட்டி குருவைப் போல ஒருவர் உருவாக வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமையில் நடந்த ஜாதி அமைப்புக் கூட்டத்தில் பேசப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மனித குலம் வெட்கித் தலைகுனியும் வகையில் அவமானகரமாக உயர்சாதி வெறியைப் பரப்பும் ப.ம.க. ராமதாஸ் உயர்சாதிக் கட்சிகளை இணைத்து அமைப்பு ஒன்றையும் உருவாக்கியுள்ளார்.
தமிழ் நாட்டில் சாதி வெறியர்கள் தமிழ் தேசியத்திற்காக கூக்குரல் போட, இலங்கையில் மக்கள் ஆதரவற்ற தலித் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் சாதிச் சங்கங்கள் இலங்கை இனப்படுகொலை அரசின் கால்களை வருடிக்கொடுக்கின்றனர். தமிழ்ப் பேசும் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கான போராட்டத்தை உயர் சாதி அமைப்புக்களின் முழக்கமாக வெளிக்காட்ட இந்திய உளவுத்துறையின் பிரித்தாளும் தந்திரமா இது என சந்தேகங்கள் எழுகின்றன.
சாதிக் கொடுமையை நிராகரிக்காத ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தலைமையும், தேசிய ஒடுக்குமுறையை நிராகரிக்காத ஒடுக்கப்படும் வர்க்கங்களின் தலைமையுமே ராமதாசையும் இந்திய உளவுத்துறையையும் எதிர்கொள்ள முடியும்.