மனிதகுலத்தின் அங்கங்களான மரணத்துள் போராடும் இக்கைதிகளின் அவலம் குறித்து பல்தேசிய ஊடகங்கள் செய்திகள் கூட வெளியிடுவதில்லை.
102 கைதிகள் உண்ணாவிரதமிருப்பதாகவும் அவர்களில் 30 பேர் ஆபத்தான நிலையில் குழாய்களின் ஊடாக உணவூட்டப்படுவதாகவும் பெண்டகன் ஒப்புக்கொண்டுள்ளது. ஆரம்பத்தில் உண்ணாவிரதமிருப்பதை மறுத்துவந்த அமரிக்கப் பாதுகாப்புத் துறை மிக அண்மையிலேயே கைதிகள் உண்ணாவிரதமிருப்பதை ஒத்துக்கொண்டுள்ளது. பாதுக்காப்புத் துறையைச் சேர்ந்த சட்டவல்லுனர்கள் நூறுபேருக்கும் மிக அதிகமானவர்கள் உண்ணாவிரதமிருப்பதாகத் தெரிவித்துளனர்.
கைதிகள் பொதுச் சிறைகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனிச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதால் மேலும் பல கைதிகள் ஆபத்தான நிலையில்ருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மூகின் வழிக்காகச் செலுத்தப்பட்ட குழாய்களினூடாக வழங்கப்படும் உணவு கைதிகளைத் தொடர்ந்து மரணத்திலிருந்து பாதுகாப்பதற்கு உதவுவதாகக் கூறுகிறார்கள்.
மூக்கின் வழியாக ஊட்டப்படும் உணவு வெளியில் வராமலிருப்பதற்காக இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக அசையாமல் இருக்கைகளில் இருத்திவைக்கப்படுகிறார்கள் என்று அமரிக்க வைத்திய கெரால்ட் தொம்டன் கூறுகிறார்.
48கைதிகள் மிகவும் ஆபத்தான நிலையிலிருப்பதாகக் கூறப்படுகின்றது.