Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மனிதகுலத்தை அவமதிக்கும் சமூகவிரோதி ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் ஆர்ப்பாட்டம்

அனைத்து சமூகப் பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஆதிக்க சாதிஅமைப்புகளை சேர்த்துக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு வரும் ஆதிக்க சாதி வெறியன் டாக்டர் ராமதாஸுக்கு எதிராக திருச்சியில் இன்று கருப்புக்கொடி காட்டும் போராட்டம் நடைபெற்றது.அனைத்து சமூக பாதுகாப்புப் பேரவை என்ற பெயரில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளார் ராமதாஸ். இதில் இடம் பெற்றிருப்பது அனைத்துமே ஆதிக்க சாதி அமைப்புகள்தான். இவர்களைக் கூட்டிக் கொண்டு ஊர் ஊராக கூட்டம் போட்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிராகப் பேசி வருகின்றனர்.
ராமதாஸும், மற்றவர்களும்.ஒவ்வொரு கூட்டத்திலும் தலித் மக்களுக்கு எதிராக மிகக் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தி வருகிறார்கள் ராமதாஸ் உள்ளிட்ட தலைவர்கள்.
சமூகப் பாதுகாப்புப் பேரவையின் கூட்டம் இன்று திருச்சியில் நடக்கிறது. இதில் ராமதாஸ் கலந்து கொள்கிறார். இதற்காக திருச்சி வந்தார். அப்போது கோர்ட் முன்பு கூடிய, விடுதலை சிறுத்தைகள், பெரியார் திராவிடர் கழகம், புதிய தமிழகம் ஆகிய கட்சியினர் ராமதாஸைக் கண்டித்து கருப்புக் கொடி காட்டி போராட்டம் நடத்தினர்.
சமூக வன்கொடுமையைத் தூண்டிவரும் ராமதாஸ் புதுச் சேரியில் பாலியல் வன்முறைக்கு உள்ளான பெண்மீதான தாக்குதலை வேறு கண்டித்து வைத்துள்ளார்.
இந்தியா வல்லரசாகிறது என்று காப்ரட் கோமாளி அப்துல்கலாம் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்துவரும் அதே வேளை மனித குல அவமானமான சாதி வெறியைத் தூண்டும் கிரிமினல் பொது மேடைகளை எந்த அச்ச உணர்வுமின்றி உலாவருகிறார்.

Exit mobile version