அபிவிருத்தி என்ற பெயரில் வடக்குக் கிழக்கை மட்டுமல்ல முழு இலங்கையையும் அன்னிய தேசங்களுக்கு அடகுவைக்கும் அரசியலை முன்னெடுக்கும் மகிந்த ராஜபக்ச அழிக்கப்படும் தேசிய இனத்தின் மத்தியில் அரசியல் வேண்டாம் என்கிறார். வடக்கிற்குச் செல்வதற்கு முன்னர் அனுராதபுரத்தில் அரச மரத்தில் மண்டியிடு வணங்கிய மகிந்த சிங்கள பௌத்த மேலாதிக்கமே வடக்கிற்கான தனது நுளைவாசல் என அறிவித்திருந்தார்.
நிலப்பறிப்பு, இராணுவ மயமாக்கல், சூறையாடல், சிங்கள பௌத்த மயமாக்கல் ஆகியவற்றையே அபிவிருத்தி என்று அழைக்கும் பேரினவாத ஏகாதிபத்திய சார்பு அரசியலுக்கு எதிரான அரசியல் மக்கள் மத்தியிலிருந்து முன்னெழ வேண்டும் என்பதே மகிந்த கும்பல் மக்களுக்குச் சொல்லும் செய்தி.
அரச துணைக்குழு ஈ.பி.டி.பி உடன் மனித குல விரோதி ராஜபக்ச கிளிநொச்சியில் ஆரம்பித்து யாழ்ப்பாணம் முழுவதும் வலம் வந்தார். இனக்கொலையில் சூத்திரதாரியின் வரவால் வடக்கு மண் அவமானப்படுத்தப்பட்டது.