Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மத வெறியைத் தூண்டும் இந்திய அமைப்பு இன்னும் சட்டரீதியாகவே இயங்குகிறது.

இஸ்லாமிய பெண்கள் அணியும் “பர்தா” வுக்கு தடைவிதிக்க வேண்டும் என சிவசேனா கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

“பர்தா” வையும், உடல் முழுவதையும் மறைக்கும் வகையிலான ஆடைகளையும் பிரான்ஸ் அரசு தடை செய்துள்ளதை பாராட்டியுள்ள சாம்னா, பர்தாவை தடைசெய்ய புரட்சிகர நடவடிக்கையை பிரான்ஸ் அதிபர் சர்கோஸி எடுத்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்து அடிப்படைவாதக் கட்சியும் பல கொலை மற்றுக் கிரிமினல் நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களுமான சிவசேனா இன்னும் இந்தியாவில் தடை செய்யப்படாட்க கட்சியாகச் செயற்பட்டு வருகின்றது.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலம் பெயர் தமிழர்கள் நிதியுதவு வழங்கியது போன்று சிவசேனாவிற்கு புலம் பெயர் இந்தியர்கள் குறிப்பாக குஜராத் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கொடுப்பனவுகளை வழங்குகிறார்கள்.
பிரான்சின் பொருளாதார நெருக்கடிக்கு எதிரான மக்களின் உணர்வுகளைத் திசை திருப்புவதற்கு எதிராக பிரஞ்சு அரசு அங்கு இரண்டாவது பெரிய மதமான இஸ்லாமிற்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வது குறிப்பிடத்தக்கது.

உச்ச நீதிமன்றத்தின் பாரப்ட்சமான அயோத்தித் தீர்ப்பின் பின்னதாக இந்தியாவில்  மதவெறி மேலோங்கி வருகிறது.

மத வெறியைத் தூண்டும் இந்தியக் இன்னும்  சட்டரீதியாகவே இயங்குகிறது.

Exit mobile version