Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மத முரண்பாடுகள் தீர்க்க புதிய போலிஸ் பிரிவு:பொது பல சேனாவின் அடியாள் படை?

BBSசமய முரண்பாடுகள் தொடர்பில் கண்டறிவதற்கான விசேட பொலிஸ் பிரிவு கொழும்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. கொழும்பு, தர்மபால மாவத்தை இலக்கம் 135இல் அமைந்துள்ள பௌத்த மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சின் 5ஆவது மாடியில் இந்த விசேட பொலிஸ் குழு செயற்பட தொடங்கியுள்ளது.

சமய முரண்பாடுகள் மற்றும் பிரதேசங்களில் இருக்கின்ற பொலிஸ் நிலையங்களில் செய்யப்படுகின்ற முறைப்பாடுகள் தொடர்பில் திருப்தி கொள்ளாவிடின் இந்த பிரிவில் முறையிடலாம் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.
இந்த முறைப்பாடுகள் தொடர்பில் 0112307674 அல்லது 0112307964 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன்

தொடர்பு கொண்டோ, அல்லது 0112307688, 0112307406 ஆகிய தொலைநகல் இலக்கங்களுகோ அறிவிக்க முடியும் எனவும், இந்தப் புதிய பொலிஸ் பிரிவில், உதவி; பொலிஸ அதிகாரியின் கீழ் பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபிள்கள் அறுவர் கடமையாற்றுவர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மதங்களுக்கு இலங்கையில் மத முரண்பாடுகள் கிடையாது. மதங்கள் மீதான இலங்கை அரசின் திட்டமிட்ட ஒடுக்குமுறையே உள்ளது.இடையே முரண்பாடுகளை உருவாக்குவதே இலங்கை அரசு தான். பொது பல சேனாவின் பின்னணியில் இலங்கை அரசு செயற்பட்டுவருகின்றமை அனைவரும் அறிந்த செய்தி. உலகின் ரி.ஆர்.சி என்ற அமைபு பொது பல சேனாவை பயங்கரவாத அமைப்பாகக் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் அரச படைகளுடன் துணையுடனேயே முஸ்லிம் மக்கள் மீதும் ஏனைய மதங்கள் மீதும் இவர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தேரவாத பௌத்ததின் பேரால் இனச்சுத்திகரிப்புச் செய்யும் உலகின் பல்வேறு பாசிச அமைப்புக்களுடன் பொதுபல சேனா தொடர்பு வைத்துள்ளது. ஆக, புதிதாக ஆரம்பிக்கப்பட்ட பொலிஸ் பிரிவு பொதுபல சேனாவின் ஆயுதப்படையா என்ற சந்தேகங்கள் உருவாகியுள்ளதாகப் சிறுபான்மைத் தேசிய இனங்களின் பிரதிநிதிகள் சிலர் கருத்து வெளியிட்டனர்.

Exit mobile version