Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மதுரை தினகரன் அலுவலகக் கொலைகள் ரௌடிகள் விடுதலை.

 2007-ஆம் ஆண்டு கருணாநியின் பேரனும் அப்போதைய திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினரும் மத்திய அமைச்சருமான தயாநிதி மாறன், மற்றும் சன் குழுமத் தலைவர் கலாநிதி மாறனுக்கும் சொந்தமான தினகரன் பத்திரிகை வெளியிட்ட கருத்துக்கணிப்பு தொடர்பாக எழுந்த கோபத்தால் கருணாநிதியின் மகனும் தென் தமிழகத்து தாதாவுமான அழகிரியின் உத்தரவின் பேரில் ரௌடிகள் புகுந்து மதுரை தினகரன் அலுவலகத்தை தாக்கி தீயிட்டுக் கொளுத்தினர். காட்டுமிராண்டித்

தனமான வன்முறை தாக்குதலில் பொறியாளர்கள் வினோத்குமார் (26), கோபிநாத் (25) மற்றும் அலுவலக ஊழியர் முத்துராமலிங்கம் பரிதாபமாக உயிரிழந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த மாறன் சகோதர்கள் இறந்த குடும்பங்களுக்கு 15 லட்சம் ரூபாய் நிதி கொடுத்ததோடு இந்தக் கொலைகளுக்கு நியாயம் வேண்டி தொடர்ந்து போராடப் போவதாகவும் சவால் விட்டார். ஆனால் கருணாநிதியை எதிர்த்து தாக்குப் பிடிக்காத சூழலில் அவரிடமே மீண்டும் சரணடைந்தார்கள் பேரன்கள். ஆனால் இக்கொலை சம்பவத்தில் ’அட்டாக்’ பாண்டி உட்பட 19 பேர் கைது செய்யப்பட்டனர். சம்பவத்தின்போது பணியில் இருந்த ஊமச்சிகுளம் டி.எஸ்.பி. ராஜாராம் மீது வன்முறையை தடுக்க தவறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதுரை செசன்ஸ் கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.பின்னர் வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுஅட்டாக்பாண்டி உள்ளிட்ட 16 பேர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.இறந்து போன அப்பாவிகளின் உறவினர்கள் பரிதவிப்போடு இருக்க கொலை செய்தவர்களும், கொலையாப்னவர்களின் முதலாளிகளும் கூடிக் கூலாவத் துவங்கி விட்டனர். குற்றவாளியான அட்டாக் பாண்டி என்னும் சாராய வியாபரியும், பொறுக்கியுமான அவனுக்கு கருணாநிதி வாரியப் பதவிகளை வேறு வழங்கியிருந்தார். இந்நிலையில்

, இந்த வழக்கு இன்று மதுரை செசன்ஸ் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ரத்ன ராஜூ, அட்டாக் பாண்டி உள்பட 16 பேரையும் பாதுகாப்புக்கு நின்றிருந்த டி.எஸ்.பி.ராஜாராமையும் விடுதலை செய்தார்.

Exit mobile version