மணிப்பூர் தலைநகர் இம்பாலிலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அன்ட்ரோ என்னும் இடத்தில் சனிக்கிழமை இரவு பாதுகாப்புப் படையினர் துப்பாக்கியால் சுட்டனர். இதில் ஏழு பேர் நிகழ்விடத்திலேயே மரணித்ததாக பாதுகாப்புப் படையினர் கூறுகின்றனர்.
சம்பவ இடத்தில் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் 2, 9 மி.மி. துப்பாக்கிகள் 3, கிரனேட்ஸ் 2 மற்றும் ஏராளமான வெடிபொருள்கள் கைப்பற்றப்பட்டன என்றும் பாதுகாப்புப் படைத் தரப்பில் கூறப்படுகிறது.
பலியான ஏழு பேரில் நான்கு பேர் இராணுவ உடையிலும், மற்றவர்கள் சாதாரண உடையிலும் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் இந்த ஏழு பேரையும் அவர்களின் வீடுகளிலிருந்து பாதுகாப்புப் படையினர் பிடித்துச் சென்று சுட்டுக் கொன்றதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.