மட்டக்களப்பு சத்துருக் கொண்டானில் உள்ள சுவிஸ் கிராமத்தை இராணுவத்தினர் சுற்றிவளைத்து சோதனை நடத்துவதுடன் அங்குள்ள வீடுகளுக்கு சென்று மக்களை புகைப்படம் எடுத்துவருவதோடு பொதுமக்களது விபரங்களையும் பதிவு செய்து வருகின்றனர் என பா.அரியேந்திரன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாணசபைத் தேர்தல் நடைபெறவுள்ள இக்காலகட்டத்தில் இராணுவத்தினரின் இந்தச் செயற்பாடுகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களை அச்சுறுத்துவதாகவே இந்த செயற்பாடு அமைந்துள்ளது. அத்தோடு இதுவொரு அடிப்படை மனிதவுரிமை மீறல் எனவும் கூறினார். எனவே உடனடியாக இராணுவத்தினர் இதுபோன்ற நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் இல்லையென்றால் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் அச்சுறுத்தல் நிறைந்த சுதந்திரமற்ற தேர்தலாகவே நடைபெறும் என அவர் கூறினார்.