Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பில் வங்கிக் கொள்ளை : ஒருவரும் கைதாகவில்லை

மட்டக்களப்பு புத்தூர் பிரதேசத்தில் வங்கியொன்று கொள்ளையிடப்பட்டுள்ளது. குறித்த வங்கிக்குள் புகுந்த கொள்ளையர்கள் 37 லட்ச ரூபா பணத்தையும் ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கொள்ளையிட்டு சென்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஆறு பேர் அடங்கிய குழுவினரே இந்தக் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பிலிருந்து மக்கள் வங்கி வாகனமொன்று குறித்த வங்கிக்கு செல்லும் நேரத்தில், மக்கள் வங்கி இலச்சினையுடன் கூடிய வாகனமொன்றில் குறித்த கொள்ளையர்கள் பயணம் செய்துள்ளனர்.

அனைத்து பணியாளர்களையும் அடைத்து இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

Exit mobile version