Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் பெண்!

இலங்கையின் மட்டக்களப்பு, நொச்சிமுனை மீள்குடியேற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்தின் தலைவி சந்திரமோகன் அனுசியா எட்டு அம்ச குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

இவர் மட்டக்களப்பு நகரிலுள்ள காந்தி சிலைக்கு முன்பாக இன்று காலை முதல் இப்போராட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.

மண்முனை வடக்கு பிரதேச செயலகம் தமது கோரிக்கைகளை நிராகரித்தமை, மட்டக்களப்பு மாநகர சபை ஊழல் மோசடி செய்தமை, மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு நீதி வழங்க மறுத்தமை, மட்டக்களப்பு மத்தியஸ்த சபை உறுப்பினர் பக்கசார்பாக நடந்து கொண்டமை, மட்டக்களப்பு காத்தானகுடி பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் தனது கிராமத்தையும் தன்னையும் சட்ட விரோதமாக நடாத்தியமை, மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு சகல பிரச்சினைகளை அறிவித்தும் அதற்கான தீர்வு தராமை, நொச்சிமுனை அரச காணிகளை விற்பனை செய்தமை போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

தனது கோரிக்கைகளுக்கான தீர்வு கிடைக்கும் வரை உண்ணாவிரதப் போராட்டம் தொடருமெனவும் அவர் அறிவித்துள்ளார்.

Exit mobile version