புலம் பெயர் நாடுகளில் ஈழம் பிடித்துத் தருகிறோம் என்று போலி விம்பத்தை மக்களுக்கு வழங்கிவரும் இவர்களின் நடவடிக்கைகள் இலங்கையிலும் மக்கள் மத்தியில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றது.
இன்று 10.01.2014 ஆம் திகதி அஜித் நடித்த வீரம் திரைப்படம் திரையிடப்பட்டதை இட்டு மட்டக்களப்பு கல்லடியில் உள்ள சாந்தி திரையரங்கில் அவருடைய கட் அவுட்டிற்கு பால் அபிசேகம் செய்து தேங்காய் உடைத்து மலர்தூவி பட்டாசு கொழுத்தி கொண்டாடினர்.
இது அப்பாவி மக்களின் தவறல்ல அவர்களின் அவலத்தில் பிழைப்பு நடத்தும் வியாபாரிகளே இங்கு குற்றவாளிகள்.
பேரினவாத அரசு அழித்துமுடிக்கும் ஈழத் தமிழக் கலாச்சாரத்தின் முற்போக்கான கூறுகளை தென்னிந்திய சினிமாக்கள் அழிக்கின்றன.
தேசியம் பேசும் விதேசிகளின் வியாபார முகமூடி கிழிக்கப்பட்டு புதிய புரட்சிகரக் கலாச்சாரத்திற்கான அடிப்படைகள் உருவாக்கப்படுதல் என்பது இனச்சுத்திகரிப்பிற்கு எதிரான போராட்டத்தின் ஒரு பகுதியாகும்.