Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மட்டக்களப்பிற்குச் சென்று இனப்படுகொலை அரசிடம் அகதிகள் ஒப்படைக்கப்பட்டனர்

ஸ்கொட் மொரிசன்
ஸ்கொட் மொரிசன்

தமிழ் அரசியல் அகதிகள் மட்டக்களப்பிற்கு அருகாமையில் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய அரசு உறுதிப்படுத்தியுள்ளது. 153 அகதிகள் மற்றும் 50 அகதிகளைக் கொண்ட இரண்டு படகுகள் கொக்கோஸ் தீவிற்கு அருகாமையில் அவுஸ்திரேலியக் கடற்படையால் இடை நிறுத்தப்பட்டு அதிலிருந்த 41 பேர் இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

திருப்பியனுப்பப்பட்டவர்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர் என எனக் குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசன் தெரிவித்துள்ளார். தவிர, அரசியல் தஞ்சம் கோரியுள்ள எஞ்சியவர்களைப் பற்றிய தகவல்களை அவுஸ்திரேலிய அரசு வெளியிட மறுத்துள்ளது. இந்தியாவின் பாண்டிச்சேரி துறைமுகத்திலிருந்து புறப்பட்ட அகதிகள் இந்தியாவில் இருந்த குறைந்தபட்சப் பாதுகாப்பையும் இழந்து இனப்படுகொலை அரசபடைகளின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

சர்வதேசச் சட்டங்களுக்கு முரணான இச்செயற்பாட்டிற்கு எதிராகவும் உலகம் முழுவதும் உள்ள அகதிகளைப் பாதுகாப்பதற்காகவும் லண்டனிலுள்ள அவுஸ்திரேலியத் தூதரகத்தின் முன்பாக நாளை ஆர்ப்பாட்டம் ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா உட்பட ஏனைய நாடுகளும் அகதிகளைத் திருப்பி அனுப்புவதை நிறுத்தக் கோரும் தொடர்ச்சியான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக தமிழ் அகதிகளுக்கான போராட்ட அமைப்புக்குழு இப்போராட்டத்தை ஒழுங்கு செய்துள்ளது.

Exit mobile version