இது தொடர்பாக அரவானிகள் உரிமை சங்கத் தலைவி ஜீவா கூறியது:
சமூகத்தில் ஒரு அங்கமாகவே அரவானிகள் சமூகம் உள்ளது. தமிழக அரசின் அரவானிகள் நலவாரியத்தின் மூலம் அரவானிகளுக்கு பல நல்ல திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
தேசிய அளவில் அரவானிகளின் பாலின அடையாளம் பதிவு செய்யப்பட வேண்டும். எனவே, வரும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் அரவானிகளை தனிப் பாலினமாக அடையாளப்படுத்தி பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு தொடர்பான கருத்துக் கேட்புக் கூட்டங்களில் அரவானிகளின் பிரதிநிதிகள் பங்குபெறச் செய்ய வேண்டும். வரும் நாடாளுமன்றக் கூட்டத்தில் அரவானிகளின் பாலினம் குறித்த சட்டம் இயற்றப்பட வேண்டும்.
தவிர, வாக்காளர் அடையாள அட்டையில் பாலினப் பிரிவில் “மற்றவர்கள்’ என்று குறிப்பிடப்படுவதற்குப் பதிலாக அரவானிகள் என்றே குறிப்பிடப்பட வேண்டும் என்றார் ஜீவா.