Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்ரெட் தட்சரின் மரணச்சடங்கிற்கு 3.6 மில்லியன் செலவானது

Baroness Thatcher funeralஉலக முதலாளித்துவத்தினதும், ஏகாதிபத்தியத்தினதும் மிக உறுதியான தலைவராகக் கருதப்பட்ட மாக்ரட் தட்சரின் மரணச்சடங்கை அதே முதளித்துவம் உழைக்கும் மக்களின் பணத்தில் நடத்தி முடித்திருக்கிறது. 3.6 மில்லியன் பவுண்ஸ் செலவு செய்து தனது விசுவாசமான அடியாள் தட்சரை புதைகுழிக்குள் அனுப்பிவைத்திருக்கிறது பிரித்தானிய மற்றும் உலக முதலாளித்துவம்.500,000 பவுண்ஸ் பெறுமதியான தொகை சென்ட் போல் கத்தரலில் நடைபெற்ற சடங்கு வைபவங்களுக்கு மட்டும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஏனைய முழுத்தொகையும் மரணச்சடங்கின் பாதுகாப்பு செலவினங்கள் என்று பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது. இத்தொகை முழுவதும் பிரித்தானியாவின் உழைக்கும் மக்கள் அரசுக்குச் செலுத்தும் வரிப்பணமாகும்.
பெரும் பண முதலைகளான தட்சரின் குடும்பம் மரணச்சடங்கிற்கு பயன்படுத்தப்பட்ட பூக்கள் மற்றும் அது தொட்ர்பான செலவினங்களை பொறுப்பேற்றது. மரணச்சடங்கிற்கு 4 ஆயிரம் காவல் படையினர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.
மரணச்சடங்கில் ஆர்ப்பாட்டங்களையும் ஊர்வலங்களையும் எதிர்பார்தே பாதுகாப்புப் பலப்படுத்தப்பட்டதாகவும் இறுதியில் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லை எனவும் பாதுகாப்புப்படைகள் அறிவித்தன.

இன்றைய கொடிய உலக ஒழுங்கை தலைமைதாங்கியவர்களுள் தட்சர் மிகப் பிரதானமான தலைவர். தட்சர் ஆரம்பித்துவைத்த நவதாராளவாதக் கொள்கையும் அதன் உலக மயமாதலும் இன்று வரை பல இலட்சம் அப்பாவிகளைப் பட்டினிபோட்டே கொலை செய்திருக்கிறது.

Exit mobile version