அரச தாதி உத்தியோகத்தர்கள் ஆறு கோரிக்கைகளை முன்வைத்து புதன்கிழமை பணிப்பகிஸ்கரிப்பு போரட்டத்தில் ஈடுபட்டனர். தங்கள் பணிப்பகிஸ்கரிப்பு வெற்றியளித்துள்ளதாக அரச தாதி உத்தியோகத்தர் சங்கச் செயலாளர் கருத்து தெரிவித்திருந்தார். பணிப்பகிஸ்கரிப்பு தினத்தில் சுகவீன விடுமுறை பெற்று கடமைக்கு சமூகமளிக்காத தாதியர்கள் பணியை விட்டு விலகியதாகக் கருதப்படுவார்கள் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இதே வெளை வன்னியில் மலையாளபுரத்தில் மக்களைச் சந்தித்து அவர்களுக்குரிய பிரச்சினைகள் குறித்து கேட்டறிவதற்கு ஏற்பாடு செய்திருந்த கூட்டத்திற்கு இராணுவத்தினரும் புலனாய்வுப் பிரிவினரும் சென்றதனால் பொது மக்கள் பலர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் குற்றம் சாட்டியிருக்கிறார்.
மேலும் யாழ்.பொது நூலகத்திற்குள் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்திற்கு ஊடகவியலார்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அவரது ஆலேசகரான முன்னாள் யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பாலசுந்தரம்பிள்ளை, மநாகர சபை முதல்வர் யோகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதற்கிடையில் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறையை நிலை நிறுத்தவும் இனங்களுக்கிடையிலான கசப்புணர்வை வளர்க்கவும் ஜனநாயக பாரம்பரியங்களை காலில் போட்டு மிதிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்த அவசரகால சட்டம் இன்று சிங்கள மக்களை நோக்கியும் திருப்பப்பட்டு விட்டது என்று பாராளுமன்றத்தில் த.தே.கூ. பாராளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்