மக்கள் விடுதலை முன்னணியினர் (ஜே.வி.பி.) ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கு ஆதரவளிப்பதாகவும், எகிப்து வகையிலான போராட்டத்திற்கு இலங்கை மக்கள் தயாராகும் நிலையில் அதற்குத் தாங்கள் தலைமை தாங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்து தங்களை அரசியல் புனிதர்களாக்க முனைந்திருக்கிறார்கள்.
ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கட்சியின் 6 வது தேசிய மகாநாட்டில் உரையாற்றுகையிலேயே, சமஷ்டி முறையில் இரு அம்சங்கள் இருப்பதாகவும் அதிலொன்று பிரிந்த சமஷ்டி முறை, மற்றது ஒன்றிணைந்த சமஸ்டிமுறை எனவும் அதில் ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கே தாம் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
ஆனால் ஒன்றிணைந்த சமஷ்டி முறை குறித்த விளக்கத்தினையோ அல்லது அதற்கான வேலைத்திட்டத்தினையோ ஜே.வி.பி. முன்வைத்ததாகத் தெரியவில்லை. ஒன்றிணைந்த சமஷ்டி முறையின் அரசியல் உள்ளடக்கத்தினையும் அதனை இன்று முன்வைப்பதற்கான உள்நோக்கத்தினையும் நாம்தான் புரிந்து கொள்ள வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை வழியிலான அரசியல் தீர்வு காண அண்மைக்காலங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளின் போது அதனை முழுமையாக எதிர்க்கும் மக்கள் இயக்கமொன்றை கட்டமைத்தவர்கள் ஜே.வி.பி.யினர் மட்டுமே. வடக்கு – கிழக்கில் அரசாங்கம் மேற்கொண்ட அழிவு யுத்தத்திற்கு தார்மீக ஆதரவை வழங்கி அந்த யுத்தத்தினை தயக்கமின்றி அரசாங்கம் மேற்கொள்ளக் கூடிய மனோபாவத்தினையும் உருவாக்கியவர்களும் ஜே.வி.பி.யினரே. வடகிழக்கு தமிழ் மக்களுக்கு அரைகுறை தீர்வகளாவது வழங்கப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போதெல்லாம் அதனை எதிர்த்து இல்லாதொழிக்கப் பாடுபட்டு உழைத்தவர்களும் ஜே.வி.பி.யினரே. தென்னிலங்கையில் யுத்தத்திற்கெதிராக எழுந்திருக்கக் கூடிய மக்கள் எதிர்ப்புக்களையும் இல்லாதொழிக்கச் செய்ததில் ஜே.வி.பி.யினரின் பங்கு கணிசமானது.
வடகிழக்கு தமிழ் மக்களின் பிரச்சினைகளை, புலிகளாகவும் காலணித்துவ செயற்பாட்டைத் தூண்டுவனவாகவும் நோக்கிய ஜே.வி.பி.யினர் புலிகளையும் காலணித்துவத்தையும் எதிர்ப்பது என்ற அரசியல் எண்ணத்தில் ஏனைய “எல்லாவற்றையும்” துறந்துள்ளார்கள். சிறுபாண்மையினங்களிற்கு எதிரான இன ஒடுக்குமுறையை தீவிரப்படுத்துதில் கடும் உழைப்பை நல்கியவர்கள் அவர்கள். சிங்களப் பாராளுமன்ற மிதவாத தலைமைகள் அரசியல் தீர்வு குறித்து யோசிப்பதே தேசத்துரோகம் என நினைத்துச் செயற்பட்டவர்கள் அவர்கள்.
சோமவன்ச அமரசிங்க (2008 இல்), இந்தப் புதிய நிலைமைகளைப் புரிந்து கொள்ள(கொண்ட) மக்கள் விடுதலை முன்னணி, மிகச் சரியாக இலங்கையின் இறைமை, சுயாதீன தன்மை, பெருமை என்பவற்றை இலங்கைக்கு மீளப் பெற்றுக் கொள்வதற்காக இன்றேல் மீண்டும் காலணித்துவ செயற்பாட்டை தோல்வியடையச் செய்வதற்காக புதிய விதத்திலான தேசிய விடுதலை இயக்கமொன்றின் தேவை பற்றி வலியுறத்தியது. அந்தத் தேசிய விடுதலை கிளர்ச்சியில் வெற்றி பெற்று சோசலிசத்தை நோக்கிச் செல்வது தொடர்பான மூலோபாயத்தை நோக்கி மக்கள் விடுதலை முன்னணி சென்றது. இந்த மூலோபாயம் இலங்கையை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.” எனக் கூறியவை ஜே.வி.பி.யின் அரசியலைப் புரிந்து கொள்ள உதவும்.
ஜே.வி.பி. யின் இந்த தேசிய விடுதலைக் கிளர்ச்சி நிகழ்ச்சியின் படிதான் 2002 பெப்ரவரியில் ரணில்-பிரபா உடன்படிக்கையினை இல்லாதொழிக்கும் நோக்கத்திற்காக ஐ.தே.க.யினரை தோல்வியடைச் செய்தார்கள். இது குறித்து ரில்வான் சில்வா (2008 இல்), 2002 பெப்ரவரியில் ரணில்-பிரபா உடன்படிக்கையில் iயொப்பமிட்டு நாடு பிளவுபடும் திசையை நோக்கி செல்கின்ற போது விதியில் இறங்கி, ஆர்ப்பாட்டம் செய்து, பாதயாத்திரைகளை மேற்கொண்டு, கூட்டமைப்பை உருவாக்கி, ஐ.தே.க. தோல்வியுறச் செய்யக்கூடிய மக்கள் சக்தியை உருவாக்கியது நாங்கள்” எனப் பெருமித உணர்வுடன் குறிப்பிட்டிருக்கிறார்.
அதே போன்று முன்னாள் ஜனாதிபதி திருமதி சந்திரிகா குமாரணதுங்க சுனாமி நிவாரண சபையினூடாக வடக்கு கிழக்கின் நிர்வாகப் பணிகளை புலிகளிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுத்த போது அதற்கு எதரிப்புத் தெரிவித்து 4 அமைச்சர் பதவிகளை துறந்து கூட்டமைப்பை அரசாங்கத்திலிருந்து வெளியில் இறங்கியது ஜே.வி.பி.. அது மட்டுமன்றி நீதிமன்றத்தின் முன்னால் சென்று நிவராண சபையைத் தடைசெய்தது ஜே.வி.பி.. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் படி ஏற்பட்டிருந்த வடக்கு-கிழக்கு இணைப்பை நீதிமன்றக் கட்டளையின் படி இல்லாமலாக்கியவர்களும் ஜே.வி.பி.யினரே.
சோமவன்ச அமரசிங்க(2008இல்), “இலங்கையின் மையப் பிரச்சினை சம்பந்தாமாக கூட்டமைப்பு உடன்படிக்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளை பகையுணர்வுடன் முறித்தெறிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவியான முன்னாள் ஜனாதிபதி தயாரானபோது, அதாவது சுனாமி நிவாரண சபை என்று சொல்லிக்கொள்கின்ற ஒன்றை அமைத்து புலிகள் இயக்கத்திற்கு வடக்கு கிழக்கு ஆகிய இரண்டு மாகாணங்களை ஒப்படைக்கத் தயாரனபோது மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திலிருந்து விலகி எதிர்க்கட்சியில் அமரவேண்டிய நிலை ஏற்பட்டது. ஆயினும் நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு அரசாங்கத்தின் அனைத்து மக்கள் நல நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நலகினோம்.” எனக்குறிப்பிட்டிருக்கிறார். அரசாங்கத்தின் அனைத்து மக்கள் நல நடவடிக்கைகள் என சோமவன்ச அமரசிங்க கூறியவை தமிழ் மக்களுக் கெதிரான செயற்பாடுகளையே.
சோமவன்ச அமரசிங்க(2008இல்), குறிப்பாக பயங்கரவாதத்திற்கு எதிராக யுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி அரசாங்கத்தை நிர்ப்பந்தித்ததோடு, அவ்வனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்கு நிபந்தனையின்றி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பும் நல்கினோம் எனவும் இப்பொழுதும் கூட புலி பயங்கரவாதத்தை தோல்வியுறச் செய்வதற்காக எவ்வித மனத்தடுமாற்றமும் இன்றி மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கிக் கொண்டிருக்கிறது என குறிப்பிட்டிருந்தமை அவருடைய மக்கள் நல நடவடிக்கை எது என்பதை தெளிவாக்குகிறது.
ரில்வான் சில்வா (2008 இல்), வடமாகாணத்திலிருந்து கிழக்கு மாகாணத்தைப் பிரிக்கும் படி நாம் மஹிந்த ராஜபக்ஷ சனாதிபதிக்கு ஆலோசனை தெரிவித்த போது அவர் அதை மறுத்து விட்டார். அவற்றை மறக்க வேண்டியதில்லை. அது மாத்திரமல்ல புலிகளைத் தோற்கடிக்கும் யுத்தத்திற்காக அரசாங்கத்தை வற்புறுத்தி, மக்களுடைய கருத்தைத் தயார் படுத்துவற்கும், ஆயுதப்படைகiளின் மனோ நிலையை உயர்த்துவதற்கும் நடவடிக்கை எடுத்து பேச்சு வார்;த்தை என்ற பொறியில் சிக்கிக் கொள்ளப் போன அரசாங்கத்தை எங்களுடைய நிர்ப்பந்தத்தின் மூலம் தான் போராட்டப் பாதைக்கு இழுத்தெடுத்தோம்” எனவும் தங்களது கடந்த காலம் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார்.
ஜே.வி.பி. கடந்த காலத்தில் சிறுபாண்மை இனங்களுக்கெதிரான இனவாத்தினை பரப்புவதில் கடும் முனைப்புடன் செயற்பட்டு வந்திருந்தது. ஆளுங்கட்சியுடன் இணைந்து கொண்டு சிறுபாண்மையினங்களுக்கு எதிராக செயற்படுவதிலும் கடும் முனைப்புடன் செயற்பட்டு வந்திருந்தது. ஆளங்கட்சியின் தமிழர்களுக்கெதிரான இனரீதியான ஒடுக்குமுறைக்கான வலுவான ஆதார சக்தியாக விளங்கியது ஜே.வி.பி.யே. வடகிழக்கில் நடைபெற்ற யுத்தத்;திற்கான தீவிரமான ஆதரவு நிலைப்பாட்டினையும் ஜே.வி.பி. எடுத்திருந்தது. ஒருவகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினைப் பயன்படுத்தி தாம் விரும்பிய தேசிய விடுதலைப் பேராட்டத்தை அவர்கள் மேற்கொண்டிருந்தார்கள்.
இந்தப் பின்னணியில் ஒன்றிணைந்த சமஷ்டி முறைக்கு ஆதரவளிப்பதாக அவர்கள் குறிப்பிட்டது ஒன்றும் வியப்பிற்குரியதல்ல. அதில் வேறெந்த புதிய அரசியல் உள்ளடக்கமும் இல்லை. மாறாக அவர்களுடைய அக்கறைக்குரிய காரணம், “ கட்சி தொடர்பில் நாட்டில் தவறான புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை சர்வதேச ரீதியிலும் காணப்படுகின்றது. அதவாது ஜே.வி.பி. சமஷ்டி முறையை எதிர்க்கின்ற எண்ணப்பாடே இந்த தவறான புரிந்துணர்வாகும்” என சோமவன்ச அமரசிங்க கட்சியின் 6 வது தேசிய மகாநாட்டில் உரையில் குறிப்பிட்டதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.
சர்வதேச ரீதியில் எற்பட்டிருக்கிற தவறான புரிந்துணர்வை இல்லாதொழிக்கச் செய்யயும் விருப்பில் அவர்கள் இப்போது இருப்பதாகத் தெரிகிறது. அதற்காகவே இப்போது அவர்கள் போராடத் தொடங்கியிருக்;கிறார்கள்.