Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் வரிப்பணமும் அகதிகளும் மகிந்த குடும்ப ஒன்று கூடலும்

ஐ.நா.வின் பொதுச் சபை அமர்வில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றிருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் இலங்கையிலிருந்து 130 பேர் சென்றிருப்பதாக சுட்டிக்காட்டியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஜனாதிபதி தலைமையிலான இக்குழுவின் பயணச் செலவு 14 கோடி ரூபாவையும் தாண்டியிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமைஇடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க. செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இத்தகவலை வெளியிட்டார்.அவர் செய்தியாளர் மாநாட்டில் மேலும் விளக்கமளிக்கையில் கூறியதாவது;
“ஐ.நா.வின் சட்டவிதிகளுக்கமைய பொதுச் சபை அமர்வில் அங்கத்துவ நாடொன்றின் தலைவருடன் அதிகாரிகள் மட்டத்தில் நால்வர் மட்டுமே பங்கேற்க முடியும். அதற்கு மேலதிகமாக ஒருவரைக்கூட பொதுச் சபை அமர்வுக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள்.ஆனால், ஐ.நா.பொது அமர்வைக் காரணம் காட்டி வருடாந்தம் நூற்றுக்கும் அதிகமானோர் பயணமாகிறார்கள். இம்முறை அந்த எண்ணிக்கை 130 ஐ தாண்டியுள்ளது. இப் பெரிய எண்ணிக்கையைக் கொண்ட இந்த பிரதிநிதிகள் குழுவின் பயணச் செலவு 14 கோடி ரூபாவைத் தாண்டியுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி இதற்கு முன்னர் நாட்டுக்கு நிதி உதவியைப் பெற்றுக் கொள்வதற்காக அமெரிக்கா,சீனா,ஜோர்தான் , இங்கிலாந்து, ஈரான்,இந்தியா போன்ற நாடுகளுக்குப் பலதடவைகள் பயணம் மேற்கொண்டிருந்தார். இந்தப் பயணங்களினால் எந்தளவு பயன் கிட்டியுள்ளது எனக் கேட்கவிரும்புகின்றோம். குறைந்த பட்சம் பயணச் செலவையாவது சமாளிக்க முடிந்துள்ளதா எனக் கேட்கின்றோம்.
ஜனாதிபதி தலைமையிலான இந்த விசேட பிரதிநிதிகள் குழுவின் செலவுத் தொகையான 14 கோடி ரூபாவும் நாட்டு மக்களின் வரிப்பணமாகும். அப்பாவி மக்களின் வயிற்றிலடித்துவிட்டு நாட்டுத் தலைவரும் அவரது சகபாடிகளும் உலகம் சுற்றி வருகின்றனர்.”
மகிந்த ராஜபக்சவின் குடும்ப அங்கத்தவர் பெருந்தொகையாக அங்கம் வகிக்கும் குழு அமரிக்காவில் வசிக்கும் அவரது குடும்பத்தவர்களுடன் இணைந்து குடும்ப ஒன்று கூடல் ஒன்றையும் பெரும் பணச்செலவில். புலம் பெயர் நாடுகளில் வசிக்கும் ஈழத் தமிழர்கள் சிலர் இலங்கை அரசின் ஊடாக போர் அகதிகளுக்கு உதவ வேண்டும் என்ற கருத்தை முன்வைத்து வருவது தெரிந்ததே.

Exit mobile version