மன்னார் மாவட்டம் சன்னார் கிராம மக்களது தொடர் போராட்டம் வெற்றி.
மிகவும் வறிய பின்தங்கிய நிலையினில் வாழ்ந்து வரும் இம்மக்களுக்கு மாற்றிடத்தில் வீடு மலசலகூடமென பல ஆசை வார்த்தைகள் அரசால் கூறப்பட்ட போதும் அவற்றை பொருட்படுத்தாமல் தமது நிலம் தமக்கு வேண்டுமென இப்பகுதி மக்கள் கடைசி வரை போராடியே வந்திருந்தனர். அத்தகைய சூழலில் அவர்களது போராட்டத்திற்கு அரசு அவர்களது காணியை அவர்களிடமே மீளக் கையளித்துள்ளது.