Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் – நேபாள மாவோயிஸ்டுகள் அறிவிப்பு.

ஈழத்தை நச்சுக்காடாக்கிய இந்தியா நேபாளத்தில் புதிய ஜனநாயக அரசொன்று அமைவதை தடுத்து தனது கைப்பொம்மைகளை உருவாக்கி தனது பொம்மை அரசை நிறுவவே முயல்கிறது. முடிந்தால் மீண்டும் மக்கள் எண்ணங்களுக்குப் புறம்பாக மன்னர் ஆட்சியைக் கூட கொண்டு வருவதற்கான எத்தனிப்புகளை இந்தியா நேபாளத்தில் செய்து கொண்டிருக்கும் நிலையில் நேபாளத்தில் விரைவில் புதிய பிரதமரை தேர்ந்தெடுக்காவிட்டால், மக்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றுவோம் என்று மாவோயிஸ்டுகள் எச்சரித்துள்ளனர்.அரசு அமைப்பதற்கான முயற்சியில் மாவோயிஸ்டுகள் தடுக்கப்படுகின்றனர் என்று அந்த அமைப்பின் மூத்த தலைவர் மோகன் வைத்யா கிரண்தேரே குற்றம்சாட்டியுள்ளார்.காத்மாண்டுவில் அவர் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.”வெளிநாடுகளின் உத்தரவுக்கு ஏற்ப நேபாள அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. இப்பிரச்னையில், செப்டம்பர் 17-ம் தேதி முதல் ஒரு மாதத்திற்கு நாங்கள் பிரசாரம், பொதுக்கூட்டங்கள், ஆர்பாட்டங்கள் ஆகியவற்றில் ஈடுபடவுள்ளோம். அதன் பின்னரும் சுமூக முடிவு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் மக்கள் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்ற நேரிடும்என்று மோகன் வைத்யா தெரிவித்துள்ளார். பிரதமரை தேர்வு செய்ய இதுவரை 7 சுற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ளன. 8வது சுற்று தேர்வு செப்டம்பர் 26-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில், மாவோயிஸ்டுகள் இவ்வாறு எச்சரித்துள்ளனர்.

Exit mobile version