நேற்று மாலை யாழ்ப்பாணம் சென்றிருந்த அவர் இன்று யாழ்.பொதுசன நூலகத்தில் வடக்கு ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வடக்கின் அரச அதிபர்கள் சந்;திப்பொன்றினை நடத்தியிருந்தார்.
இச்சந்திப்பு தொடர்பான தகவல்கள் வெளியாகியதையடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான காணாமல் போனோரது உறவுகள் ஒன்றிணைந்து கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடத்தியிருந்தனர். யாழ்.பொதுசன நூலக நுழைவாயிலின் முன்னாலுள்ள வீதியில் குழுமி கோசங்களை எழுப்பியவாறு இருந்தனர். காலை 9 மணியளவில் ஒன்று திரண்டு கோசங்களை அவர்கள் எழுப்பிக்கொண்டிருக்க உள்ளே அரச அதிகாரிகளை நவநீதம்பிள்ளை சந்தித்து பேசிக்கொண்டிருந்தார்;.
இச்சந்திப்பு முடிந்த பின்னர் தம்மை நவநீதம்பிள்ளை தம்மை வந்து சந்திப்பார் என எதிர்பார்த்து அப்பாவி மக்கள் காத்திருந்தனர்.
இதனைத் தவிர்த்த ஐ.நாவில் மிகப்பெரும் ஊதியத்திற்கு வேலைபார்க்கும் நவி பிள்ளை ஏனைய அதிகாரிகளின் துணையோடு பின் கதவால் தப்பிச் சென்றுள்ளார்.
இதனையறிந்த மக்கள் அவரைச் சந்திக்க பின்வயியாகச் செல்ல முற்பட்ட போது பேரினவாத பாசிச அரசின் புலனாய்வுப் படைகள் மக்களைப் பலவந்தமாகத் தடுக்க முற்பட்டது. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்ட நவி பிள்ளை அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
சரியாக ஒரு வருடங்களின் முன்னர் நவனீதம் பிள்ளையின் சொந்த நாடான தெனாபிரிக்காவில் ஏழைத் தொழிலாளர்கள் கூலியுயர்வுக்காகப் போராட்டம் நடத்திய போது அந்த நாட்டின் அரசு மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது.
உலகமே பேசிய இக்கொலைகள் நவிப் பிள்ளையின் கொல்லைப் புறத்தில் நடைபெற்ற படுகொலைகள். இது குறித்து மூச்சுக்கூட விடாத நவிப் பிள்ளையோ ஐ.நா வோ மக்களுக்கு எதையும் பெற்றுத்தரப் போவதில்லை. மக்கள் போராடியேஉரிமைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும் .