Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்கள் அவலம், ஜனாதிபதி பிறந்தநாள் கொண்டாட்டம்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பிறந்தநாளை முன்னிட்டு இலங்கை விழக்கோலம் பூண்டுள்ளது. ராஜபக்ச குடும்பத்தினரும் அரச படைகளும் பிறந்த நாளை விழாவாகக் கொண்டாடுமாறு முன்னதாகவே வற்புறுத்த ஆரம்பித்துவிட்டனர்.
அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண , பிரதேச சபைகளின் உறுப்பினர்கள் அரசாங்க அதிகாரிகளின் தலைமையிலேயே இவ்வாறான வைபவங்கள் நடைபெறுகின்றன.

வடக்கு முதல் தெற்கு வரையிலும் இவ்வாறான வைபவங்கள் ஏக காலத்தில் நடைபெற்றுவதுடன் சில வைபவங்களை மாகாண முதலமைச்சர்கள் தலைமை தாங்கி நடத்தியுள்ளனர். வைபவங்களில் மத தலைவர்கள், பொதுமக்கள் மட்டுமன்றி பாடசாலை மாணவர்களும் பங்கேற்றுள்ளனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினம் மற்றும் இரண்டாவது தவணைக்கான பதவியேற்பை முன்னிட்டு கடந்த திங்கட்கிழமை முதல் அரசாங்கம் நிகழ்வுகளை நடத்திவருகின்றது.

ஜனாதிபதியின் பிறந்த நாளான இன்று 18 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு முதலாவது கப்பல் வருகைதரவிருக்கின்றது அக்கப்பலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவேற்பார் .ஜனாதிபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 4000 ஆயிரம் கிலோ கிராம் கொண்ட பாற்சோறும் தயாரிக்கப்படவுள்ளது.

Exit mobile version