Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களைப் பொறுத்தளவில் தேர்தல்கள் அவர்களுக்குச் சோதனைகளே: சித்தார்த்தன்.

 

யாழ்ப்பாணம், வவுனியாவுக்கான தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட உள்ளூர் சபைகளுக்கான தேர்தல்கள் ஆகஸ்ட் மாத முற்பகுதியில் நடைபெறவிருக்கின்றன. ஏறக்குறைய மூன்று தசாப்தகாலப் போரினால் பாரிய அவலத்திற்குள்ளான இப்பிரதேசத்தில் அமைதி நிலையை மீண்டும் உருவாக்குவதற்கான இலங்கை அரசின் செயற்பாடுகளுக்கு இவை பாரிய பரீட்சார்த்தமாக அமையப்போகின்றன.மே மாதத்தில் இலங்கை அரசாங்கம் விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடித்த பின்னர் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் போரினாற் சிதைவுற்ற பகுதிகளில் அவர்கள் வாக்களிக்கப்போகிறார்கள்.
இந்த இரண்டு பட்டினங்களும் வடக்கு பிரதேசத்தில் வடக்கிலும் தெற்கிலும் அமைந்துள்ளன. இப்பிரதேசம் அரச படைகளுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற போருக்குச் சாட்சியமாக அமைகிறது. இறுதியில் அரச படைகள் புலிகளை கிழக்குக் கரையில் அகப்படுத்தி மே மாதம் 19 ஆம் திகதியன்று அவர்களது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றனர்.
அரசினது எந்த ஒரு திட்டத்தின் கீழும் தீர்வை எட்டவிரும்பாத விடுதலைப் புலிகளின் கீழிருந்த யுத்தத்தினால் சீரழிக்கப்பட்ட வடபகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் எந்தத் தலைமைத்துவமும் இல்லாத நிலையிலேயே உள்ளனர். சிலர் கூறுவதுபோல இந்தத் தேர்தல்கள் நாட்டில் ஜனநாயக ரீதியில் பன்மைத்துவ முறை மீண்டும் ஏற்பட வழிவகுக்கும் என நம்பப்படுகிறது.
கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் கூறுவதாவது;

“முன்னர் அதிகாரம் இராணுவத்தினது அல்லது விடுதலைப் புலிகளின் கைகளிலேயே இருந்தது. அது வடக்கு மக்களிடம் இல்லை’ கருணா 2004 புலிகளிடமிருந்து பிரிந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சயில் இணைந்து பாராளுமன்ற அங்கத்தவராக உள்ளார்.

அவர் ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது; “தேர்தல்கள் அந்த நிலையை மாற்றி கிழக்கில் நடைபெற்றது போல அதிகாரம் மக்கள் கைக்கு மாறலாம்’.

கிழக்கிலிருந்து புலிகளை அகற்றியவுடன் 2008 இல் அரசாங்கம் அங்கு இதேவிதமாக பிரதேச சபைத் தேர்தல்களை நடத்தியது.

ஆரம்பத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டவிதம் கண்டனத்திற்கு உள்ளானாலும் முரளீதரனது ஆதரவாளர்கள் நிறைந்த சபைகள் சுமுகமாக செயற்படத் தொடங்கின. கிழக்கின் வெற்றி வடக்கிலும் பிரதிபலிக்கும் என முரளீதரன் நம்புகிறார்.

அவர் கூறியதாவது: “பல வருடங்களுக்குப் பின் கிழக்கில் தேர்தல்கள் நடத்தப்பட்டபோது, இது நடைமுறைச் சாத்தியமற்றது எனப் பலர் கூறினர். தேர்தல் நடத்தப்பட்ட முறை பற்றியும் வினா எழுப்பியவர்கள் பலர். ஆனால், இன்று கிழக்கு மக்கள் ஜனநாயகத்தை அனுபவிக்கின்றனர்.

அவர் மேலும் கூறியதாவது: “அதேவிதமாக, வடக்கிலும் ஜனநாயகத்தை நிலைநாட்ட அரசு முயற்சிக்கிறது. மக்கள் அதை விரும்பினாலும் அல்லது விரும்பாவிட்டாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அது பற்றி அவர்கள் கவலையடைய மாட்டார்கள். கிழக்கு மக்கள்போல வடக்கு மக்களும் இதுதான் உகந்த வழிஎன ஏற்றுக்கொள்வார்கள்’.

தேர்தல்களில் பங்குபற்றுபவர்கள் ஏற்றுக்கொள்வதாவது தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் மீது தமிழ் மக்கள் எவ்வித கட்டுப்பாடும் அற்றவர்களாகவே இருப்பினும் எந்த ரூபத்திலாவது தேர்தல்கள் அவை இல்லாமலிருப்பதிலும் பார்க்க சிறந்ததாகும்.

தர்மலிங்கம் சித்தார்த்தன், புளொட் தலைவர், ஐ.பி.எஸ்.ஸிற்குக் கூறியதாவது; “மக்களைப் பொறுத்தளவில் தேர்தல்கள் அவர்களுக்குச் சோதனைகளே. எல்.ரீ.ரீ.ஈ.இல்லாமல் அவர்கள் தேர்தலிற் பங்குபற்றியமை இதுவே முதற்தடவையாகும். தேர்தல்களில் கடந்த ஆண்டுகளில் எல்.ரீ.ரீ.ஈ.யின் தலையீடுகள் இருந்தன’.

அவர் மேலும் கூறியதாவது: “அரசியல்வாதிகளிடையே தேர்தல் சூடுபிடித்தாலும் வாக்காளர்கள் அமைதியாகவே உள்ளனர்’.

அவர் கூறியதாவது; “இப்போது மக்கள் ஆர்வம்காட்டுவதாகக் காணப்படவில்லை. நாங்கள் பல சிறு கூட்டங்கள் நடத்தியுள்ளோம். மக்கள் கூடிப் பங்குபற்றுகின்றனர். ஆனால், ஆர்வம்காட்டவில்லை’.

சில அரசியல்வாதிகள் கூறுவதாவது; “யாழ்ப்பாணமும் வவுனியாவும் கடந்த 18 மாதங்களில் இங்கு யுத்தத்தைக் காணவில்லை. ஆனால், அண்மையில் நடைபெற்ற போர் அதனது கொடூரத்தை வெளிப்படுத்தியுள்ளது’.

“இந்த இரண்டு பிரதேசங்களும் யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் நேரடியாகப் பாதிக்கப்படாவிட்டாலும் பல மக்கள் தமது உறவினர்களை இழந்துள்ளனர். எனவே, மக்கள் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தேர்தல்களை நடத்தவேண்டாம்’ என அரசிற்கு விண்ணப்பித்தோம்’.

290,000 மக்கள் அகதிகளாகி பெரும்பான்மையான மக்கள் யாழ்ப்பாணம், வவுனியாவிலுள்ள நலன்புரி அகதி முகாம்களில் உள்ளனர். மனித உரிமைக் குழுக்கள் இந்த முகாம்கள் மனித வாழ்க்கைக்கு லாயக்கற்றவை என்றும், இராணுவத் தடுப்பு முகாம்கள்போல் உள்ளவை எனவும் கூறுகின்றன.

சித்தார்த்தனுடைய கட்சி அரசை தேர்தல்களை ஒத்திப்போடுமாறு விண்ணப்பித்தது. ஆனால், அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

“இந்த தேர்தல்கள் மக்களுக்கு நன்மையளிக்கப் போவதில்லை. மக்கள் பேரவலத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்த முகாம்களில் ஒவ்வொரு குடும்பமும் யாரோ ஒருவரை இழந்தோ, கொல்லப்பட்டோ, காயமடைந்தோ உள்ள நிலையில் உள்ளது’ எனத் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்த சங்கரி கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது; “தங்களது உறவினர் எங்கேயுள்ளனர் என்றும் அறியாத நிலையில் இவர்கள் வேறு விடயங்களைப் பற்றி எவ்வாறு சிந்திக்கலாம், அவர்களுக்குத் தேர்தல்களில் எவ்வித ஆர்வமும் இல்லை. தேர்தல்களை நடத்த இது உகந்த நேரமல்ல.

“இந்தத் தேர்தல்கள் தேவையற்றவை. தேர்தல்களை நடத்த இது உகந்த நேரமல்ல. நிலைமைகள் தேர்தல்கள் கடந்த சுமுகமான நிலையில்லை. மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. எந்தக் கூட்டத்திற்காவது போக அவர்கள் பயப்படுகின்றனர். பலர் உயிர்களுக்கு அஞ்சுகின்றனர். அரசியல் கூட்டங்களுக்குச் சென்றால் ஆபத்து என நினைக்கின்றனர். இந்த அச்சம் காரணமாகத் தாம் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் எனக் காட்டிக்கொள்ள அவர்கள் விரும்பவில்லை’ என்கிறார் தமிழர் தேசியக் கூட்டணியைச் சேர்ந்த சுரேஷ் பிரேமசந்திரன்.

பாராளுமன்றத்திலுள்ள 255 அங்கத்தவர்களுள் ரி.என்.ஏ.க்கு 22 அங்கத்தவர்கள் உள்ளனர். தேர்தல் நடத்த உகந்த நேரமல்ல இது என அவர்கள் கருதினாலும், தேர்தலிற் பங்குபற்றுகின்றனர்.

எனினும் சில தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்கள் சிறந்த முறையில் நடத்தப்பட்டால் இந்தப் பிரிவுபட்ட நாட்டில் தமிழர்களது நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளும் அத்திபாரத்தை இட அது உதவும் என எண்ணுகிறார்கள்.

“மக்கள் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். அதை எவரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நாங்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும்வரை பொறுத்துக் கொள்ள முடியாது. பிரச்சினைகள் இருக்கும் போதே அவைகளைத் தீர்க்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பிரச்சினைகள் தீரும்வரை காத்திருக்கக் கூடாது. இது பிரதேச சபைக்கான தேர்தல் என்று எண்ணி விடக்கூடாது. அதற்கு அப்பாலும் எண்ண வேண்டும்’ என்கிறார் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா.

ஐ.பி.எஸ்.

 

 

 

 

 

Exit mobile version