Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களைப் பேரவலத்திற்குள் அமிழ்த்தப்போகும் இந்திய அபிவிருத்தியும் வல்லரசுக் கனவும்

மூழ்கிக்கொண்டிருக்கும் அமரிக்கப் பொருளாதாரத்தை தற்காலிகமாகவேனும் தக்கவைத்துக் கொள்வதற்காக உலகம் முழுவதும் போர் மேகங்கள் உருவாக்கப்படுகின்றன. எவ்வாறு அபிவிருத்தி, பொருளாதார அபிவிருத்தி என்ற அழகிய சொற்களுக்குள் அமரிக்கப் பொருளாதாரம் அடிமைகளை மீண்டும் உருவாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை நியூயோர்க் டைம்ஸ் இல் வெளியான வரைபடம் விபரிக்கின்றது. 1980 இல் உலக மயமாதல் உருவாக்கப்பட்ட நாளிலிருந்து தொழிலாளர்களின் வேலைசெய்யும் திறன் அதிகரிக்கும் அதே வேகத்தில் அவர்களின் ஊதியம் குறைந்து கொண்டே செல்கிறது. பணம் மேலும் பணம்படைத்த விரல்விட்டு எண்ணக்கூடிய சிலரிடம் சென்றடைகிறது. இறுதியில் வேலையின்மை அதீத வறுமை என்பன விழைபலனாகிறது. இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் இன்று அபிவிருத்தி என்ற பெயரில் நடைபெறும் கொள்ளையும் சூறையாடலும் பணம்படைத்தவர்களுக்கானது. ஏற்கனவே வறுமைக்குள் வாடும் இந்த நாட்டு மக்கள் ஒட்டச் சுரண்டப்படுகிறார்கள் என்பதற்கும், உலகில் என்றுமில்லாத அவலத்திற்குள் இந்த நாடுகள் தள்ளப்படும் என்பதற்கும் வரைபடம் காட்டும் அமரிக்கா வாழும் உதாரணம்.
[open graph in new window/tab]

Exit mobile version