Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களைப் பயமுறுத்த நல்லூர் ஆலயத்தின் முன்னால் காவலரண்

நல்லூர் ஆலயத்தின் முன்னால் இராணுவம் பாதுகாப்பு அரண்களை அமைத்திருப்பது யாழ்ப்பாணத்தை மேலும் இராணுவ மயப்படுத்தலின் பகுதியாகவும் மக்கள் மீதான உளவியல் யுத்தத்தின் ஒரு பகுதியாகவும் கருதப்படுகின்றது.
கடந்த காலங்களில் நல்லூர் ஆலயச் சூழலில் பொலிஸாரே பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். இந்நிலையில் பாதுகாப்பு என்ற பெயரில் திடீரென காவலரண் அமைக்கப்பட்டு இராணுவக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளமை சந்தேகத்தை ஏற்படுத்துவதாக ஆலயத்துக்குச் சென்ற பக்தர்கள் தெரிவித்தனர்.
நீண்ட காலத்துக்கு தொடர்ந்தும் நிலைகொள்ளும் வகையிலேயே இந்தக் காவலரண் அமைக்கப்பட்டுள்ளதாவெனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Exit mobile version