Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களின் காணிகளை அரசாங்கம் ரி 56 ரக துப்பாக்கியைக் காண்பித்துக் கொள்ளையிட்டது

சுதந்திரமாக வாழ்ந்துவந்த பானம மக்களை துப்பாக்கியால் நிர்க்கதிக்குள்ளாக்கி தற்போதைய அரசாங்கம் அந்த மக்களின் காணிகளைக் கொள்ளையிட்டுள்ளதாக ஊவா வெல்லஸ்ஸ தெதிசாவே பிரதான சங்கநாயக்கர் சந்திர ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி என்ற பெயரில் மேற்கொள்ளப்படும் காணி கொள்ளைகளை நிறுத்திவிட்டு வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்போம் என்ற பெயரில் கொழும்பில் நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

பானம கிராமத்து மக்களின் காணிகளை அரசாங்கம் ரி 56 ரக துப்பாக்கியைக் காண்பித்துக் கொள்ளையிட்டது. மக்களை மாத்திரமல்லாது விகாரைகளிலிருந்த தேரர்கள்கூட துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்டனர். அதன்பின்னர் அந்த இடத்தில் பொலிஸாரின் காவலரன் ஒன்று அமைக்கப்பட்டது.

பானம பிரதேசத்தில் வாழ்ந்துவந்த மக்களின் காணிகளை பறிந்துவந்த அரசாங்கம் அங்கு கடற்படையினரின் அதிகாரத்தை உறுதிப்படுத்தியுள்ளது.

காணிகளுக்கு அருகிலுள்ள விகாரைக்குக்கூட மக்கள் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அந்தப் பிரதேசத்திலுள்ள களப்பில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்களுக்கு தமது தொழிலில் ஈடுபடுவதற்கும் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும் சந்தன ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.

பானம பிரதேசத்தில் சுமார் 3000 ஏக்கர் நிலம் அரசாங்கத்தினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version