Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மக்களின் அவலங்களின் மீது அரசியல் நாடகம் நடத்தும் ஜெயலலிதாவும் ஈழ அகதிகளும்

tamil_refugeesமக்களின் அவலத்தின் மீது அரசியல் நாடகம் நடத்தும் ஜெயலலிதா அரச படைகள் அடிப்படை உரிமையை மறுத்ததால் தற்கொலை செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்ட ஈழ அகதி.
பூந்தமல்லி சிறப்பு அகதிகள் முகாமில் தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு இலங்கை தமிழர் மயங்கி கிடந்தார். தன்னை சந்திக்க வந்த மனைவியை போலீசார் கைது செய்ததால் அவர் தற்கொலைக்கு முயன்றார்.
பூந்தமல்லி அடுத்த கரையான்சாவடியில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை தமிழர்களான சந்திரகுமார், பகிரதன், கங்காதரன், ஜெயமோகன் ஆகிய 4 பேர் அகதிகளாக அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்கள் தங்களுக்கு வழங்கப்படும் உணவுப்படியை ரூ.70-ல் இருந்து ரூ.150 ஆக உயர்த்தி கொடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில நாட்களாக உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சந்திரகுமாரை பார்ப்பதற்காக தனது குழந்தைகளுடன் வந்த அவரது மனைவி ஜெயநந்தினிக்கு முகாமில் அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவர், தனது கணவரை சந்திக்க அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி முகாமிற்கு வெளியே குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
நேற்று முன்தினம் காலை முதல் அவர், உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டதாள். ஜெயநந்தினியை தற்கொலை முயற்சி வழக்கில் போலீசார் கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.
உண்ணாவிரதம் இருந்த தனது மனைவி ஜெயநந்தினியை போலீசார் கைது செய்ததால் ஆத்திரமடைந்த சந்திரகுமார், தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போராட்டத்தில் ஈடுபட்ட மற்ற அகதிகளிடம் கூறினார்.
இதுபற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் தாசில்தார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு, நள்ளிரவில் அகதிகள் முகாமுக்கு சென்று பார்த்தனர். அங்கு சந்திரகுமார் மயங்கிய நிலையில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

Exit mobile version