Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த வெற்றிபெற்றால் தமிழ் மக்கள் பிரச்சனை பற்றிச் சிந்திப்பார் : PLOTE

a-look-backஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலான கூட்டமொன்று வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் இன்று நடைபெற்றுள்ளது. வடக்கின் வசந்தம் திட்டத்தின் பொறுப்பாளரும், ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகருமான பசில்
ராஜபக்ச எம்.பி, மீள்குடியேற்ற அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, அரசாங்கத்தின் உயர்மட்ட அதிகாரிகள், வவுனியா மாவட்ட செயலக அதிகாரிகள், கலந்து கொண்டிருந்தனர். நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக இருந்தவந்த தலைவர்களில் அநேகமானவர்கள் தமது ஆட்சியின் இரண்டாவது காலப்பகுதியில் தான் இனப்பிரச்சினை தீர்வைப்பற்றி சற்று சிந்திக்கத் தொடங்கியிருந்தனர். இரு ஆட்சி காலங்களுக்கு மேல் ஜனாதிபதி ஒருவர் இருக்கமுடியாதென்பதே இதற்குக் காரணமாகவிருந்தது. எனவே மகிந்த ராஜபக்ச வெற்றிபெற்றால் தமிழ் மக்களின் பிரச்சனை பற்றிச் சிந்திப்பார் என புளொட் (PLOTE) வவுனியா மாவட்டப் பொறுப்பாளர் தெரிவித்தார்.

புலிகளின் அழிவின் பின்னர் நடைபெற்ற கொண்ட்டாடங்களின் போது இலங்கையில் தமிழ் மக்களிற்குப் குறிப்பான பிரச்சனைகள் எதுவும் இல்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version