Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த வருகைக்கு எதிராக ஹீத்ரோவில் நடந்த போராட்டம்

இன்று (29.11.10) லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தின் நான்காவது இறங்குதளத்தில் நடைபெற்ற மகிந்த ராஜபக்சவின் வருகைக்கு எதிரான போராட்டத்தில் 500 வரையான பிரித்தானியா வாழ் தமிழர்கள் உணர்வு பூர்வமாகக் கலந்துகொண்டனர். இன்று அறிக்கப்பட்ட போராடம் குறித்த் நிகழ்வில் இவ்வளவு தொகையானோர் கலந்துகொண்டமை எதிர்பார்க்கப்படாத ஒன்றாகும். கலந்துகொண்டவர்கள் மகிந்த ராஜபக்ச போர்க்குற்றவாளியென முழக்கமிட்டனர்.
பத்து மணியளவில் சுமார் பத்துப் பேர்வரை மறைத்து வைத்திருந்த புலிக் கொடிகளோடு ஆர்ப்பாட்டத்தின் முன்னேவந்து நின்றனர்.
இதனால் அதிர்ப்தியடைந்த பலர் ஆர்ப்பாட்ட நிகழ்விலிருந்து விலகிச்சென்றதைக் காணக்கூடியதாக இருந்தது. அதே வேளை பார்வையாளர்களாக நின்றிருந்த ஏனைய இனத்தவர் சிலர் புலிக் கொடிகளைக் கண்டதும் “தமிழ்ப் புலிகள்” என்று பேசிக்கொண்டனர்.
மக்கள் எழுச்சியைப் புலிகளின் எழுச்சியாகக் காட்ட முனைந்தமை புலம் பெயர் நாடுகளில் பல போராட்டங்களின் தோல்விக்குக் காரணமாக அமைந்திருந்தது என்பதை பலர் உணரமறுக்கின்றனர். புலிக் கொடிகளோடு போராட்டங்களின் இடையே நுளைபவர்கள் “இவைகள் எல்லாம் புலிகளின் திட்டம்” என்ற இலங்கை அர்சின் பிரச்சாரத்திற்குத் துணைபோகின்றனர். இவர்கள் இலங்கை அரச உளவாளிக் குழுக்களில் அங்கம் வகிக்கலாம் என்ற சந்தேகங்களும் விலகிச்சென்ற பலரின் மத்தியில் காணக்கூடியதாக இருந்தது.

Exit mobile version