விடுதலைப் புலிகளுடன் நடந்த போரின் போது இலங்கை அதிபர் ராஜபக்ச போர் மரபுகளை மீறி செயல்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் தமிழர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரில் கண்மூடித்தனமான படுகொலைகளை மேற்கொண்டதற்கு எதிராக 30 மில்லியன் டாலர்களை அதிபர் ராஜபக்ச நஷ்டஈடாக வழங்க வேண்டும் என்று அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்கள் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளனர்.
விடுதலைப் புலிகளுடனான இறுதிக்கட்ட போரின் போதும் இன்னும் வேறு இரண்டு சந்தர்ப்பங்களில் கண்மூடித்தனமான படுகொலைகள் மூலம் தமது உறவினர்கள் கொல்லப்பட்டதாகவும் மனுவில் கூறியுள்ளனர்.
இந்த வழக்கை அமெரிக்காவின் பிரபல வழக்கறிஞருமான புரூஸ் பெய்ன் தாக்கல் செய்துள்ளார்.
ராஜபக்சவிடமிருந்து பதில் கிடைக்கா விட்டால், அவர் தரப்பு இல்லாமலேயே வழக்கை முன்கொண்டு செல்ல தாம் தயாராக இருப்பதாக புரூஸ் பெயின் அறிவித்துள்ளார்.