Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்ச மீது வழக்குத் தொடர முடியாது – அவுஸ்திரேலிய பிரதமர்

மத்திய அரசின் அனுமதியின்றி இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக அவுஸ்திரேலிய நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தொடர முடியாது என அவுஸ்திரேலிய பிரதமர் ஜூலியா கில்லார்ட் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பிறந்த அருணாச்சலம் ஜெகதீஸ்வரன் என்ற நபர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு எதிராக மெல்பேர்ன் நீதிமன்றில் போர்குற்ற வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
பொது நலவாய நாட்டுத் தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பேர்த் சென்றுள்ள நிலையில் இவ்வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசின் அனுமதியின்றி அவ்வாறு வழக்குத் தொடர முடியாதென அவுஸ்திரேலிய பிரதமர் இன்று தெரிவித்துள்ளார்.
இவ்வாறான வழக்கில் சட்டமா அதிபரின் ஆலோசனையின்றி எதுவும் செய்ய முடியாதென அவுஸ்திரேலிய ஏபீசி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வன்னி இனப்படுகொலை நிகழ்த்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை அறுபது வருடங்களாக அன்னிய நாடுகளை நம்பி தோல்வியடைந்தது போன்றே இன்றும் நடந்து கொள்கிறார்கள் தமிழர்களை ஏமாற்றும் தலைமைகள். தற்காலுமாக போலி நம்பிக்கைகளைக் வழங்குவதும் பின்னதாக தோலியடைந்ததும் புதிய நம்பிக்கைகளை வழங்குவதும் இவர்களின் நாடகம்.

Exit mobile version