தமிழ்ப் பேசும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை இந்திய உளவுத்துறையோடு இணைந்து சீர்குலைப்பதில் சுவாமியின் பங்கு அளப்பரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அமைதியான சூழ்நிலை இலங்கைக்கு மாத்திரமல்ல இந்தியாவுக்கு அவசியமானது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, தமிழீழ விடுதலைப்புலிகளை போரில் தோற்கடித்த தலைவராக உள்ளார் என மேலும் குறிப்பிட்டார்.
மத வெறியனும் தமிழின விரோதியுமான சுப்பிரமணியம் சுவாமி தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஆலோசகரும்நண்பரும் ஆவர். தமிழகத்தில் திராவிடக் கட்சிகளைச் சிதைத்து சிறுபான்மைப் பார்ப்பன பாசிசத்தை மீளமைப்பதில் இவரின் பங்கு குறிப்பிடத்தக்கது.
ஜெயலலிதா முதலமைச்சரானதும் அவருக்கு வாழ்த்துச் செய்திகளை அனுப்பிக் குவித்த ‘தமிழ்த் தேசிய அறிவீனர்களின்’ அடுத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி ஆனாலும் வியப்பில்லை.