கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையிலுள்ள நீர்கொழும்பு பிரதேசத்தைச் சார்ந்த சீதுவ கிராமத்தில் வாழ்ந்தவர்களுக்கு பிரித்தானிய அரசு வழங்கிய குடும்பப் பெயரே ராஜபக்ச என்று அழைக்கப்படுகிறது. பிரித்தானிய அரசிற்கு போட்டுக்கொடுக்கும் பணியைச் செய்தவர்களை மரியாதை செலுத்தும் முகமாக இப்பெயர் வழங்கப்பட்டது. ராஜபக்சக்கள் மலாக்கன் கத்தோலிக்கர்கள்.(அவர்களின் மங்கோலைட் முகச்சாயலுக்கான காரணம் இதுவே)
மகிந்த ராஜபக்சவின் தந்தையின் பெயர் டொன் அல்வின் ராஜபக்ச. மகிந்த ராஜபக்சவின் இயற்பெயர் பேர்சி மகிந்த ராஜபக்ச. அரசியலில் பிழைப்பதற்காக கத்தோலிக்கர்களான ராஜபக்சக்கள் பௌத்தர்களாக மதம் மாறிக்கொண்டனர்.
பிரேமதாசவைத் தவிர இலங்கை அரசியலில் சிங்கள பௌத்த அரச அதிபர்களாகப் பதவிவகித்த அனைவருமே கத்தோலிக்கர்கள் அல்லது கிறீஸ்தவர்கள். இலங்கை வரலாற்றில் பௌத்த சிங்களத் தீவிரவாதிகளாகத் தம்மை அடையாளம் காட்டிக்கொண்ட சொலமன் வெஸ்ட் ரிட்ஜ்வே டயஸ் பண்டாரநாயக்க, ஜுலியட் ரிச்சார்ட் ஜெயவர்தன போன்றவர்கள் வலுவான கிறீஸ்தவப் பின்னணியைக் கொண்டவர்கள். பேரினவாத்ததைத் தூண்டி மக்களைப் போதையூட்டி வைத்திருப்பதற்காகவே இவர்கள் பௌத்தத் தீவிரவாதத்தைப் பேசினர்.
பௌத்தத்தின் பேரால் நாட்டில் வன்முறையத் தூண்டிய கிறீஸ்தவர்கள் தமது ஆட்சி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொண்டனர்.
கத்தோலிக்கர்களான ராஜபக்ச குடும்பம் இன்று இலங்கையில் அதிக செல்வாக்குப் படைத்த பணக்காரக் குடும்பங்களில் ஒன்று. ராஜபக்சவின் குடும்பக் குழுமம் முழுவதுமே இலங்கையின் பல்வேறு துறைகளில் உயர்பதவிகளில் நியமிக்கப்பட்டுள்ளனர். இலங்கையை ஒட்டச் சுரண்டிய ராஜபக்ச குடும்பமே வன்னியில் ஆயிரக்கணக்கான மக்கள் இனப்படுகொல செய்யப்படுவதற்குக் காரணமாகியது.
நீர்கொழும்பின் சீதுவப் பகுதியைச் சேர்ந்த ராஜபக்ச குடும்பம் தமது மலாக்கன் கத்தோலிக்க முன்னோர்களுடன் சேர்ந்து கம்பந்தோட்டம் என்ற பிரதேசத்திலுள்ள சிப்பிக்குளம் மற்றும் கிருவாபத்துவ ஆகிய கிராமங்களில் குடியேறினர். இலங்கையின் தென் மாகாணத்திலுள்ள கம்பந்தோட்டமே இப்போது ஹம்பாந்தோட்ட என்று அழைக்கப்படுகின்றது.
போத்துகீசர் மலாக்காவை ஆக்கிரமிக்க முற்பட்ட காலப்பகுதியான 16ம் நூற்றாண்டில் அங்கிருந்து வெளியேறியவர்களில் ஒருபகுதியினர் இலங்கையில் குடியேறினர். இலங்கையின் கரையோரப்பகுதியான நீர்கொழும்பில் மலாக்கா உட்படப் பல்வேறு மலேசிய நகரங்களிலிருந்த குடியேற்றங்கள் தொடர்பான வரலாறுகள் காணப்படுகின்றன.
ஹம்பாந்தோட்டையில் நிலப்பிரபுக்கள் குடும்பத்தைச் சேர்ந்த ராஜபக்சக்கள், அப்பகுதியில் அரசியல் செல்வாக்குச்செலுத்த ஆரம்பித்தனர். தேரவாத பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட அப்பகுதியில் அரசியல் பிழைப்பிற்காக ராஜபக்சக்கள் பௌத்தர்களாகத் தம்மைக் காட்டிக்கொண்டாலும் கத்தோலிக்கத்தையே கடைப்பிடித்தனர்.
டொன் டேவிட் ராஜபக்சவின் மகனான டொன் மத்தியூ ராஜபக்ச 1936 ஆம் ஆண்டு அரச சபைக்கு ஹம்பாந்தோட்டைப் பிரதிநியாத் தெரிவானார்.
1945 ஆம் ஆண்டு டொன் மத்தியூ ராஜபக்ச மரணமடைந்ததும், அவரின் சகோதரரான டொன் அல்வின் ராஜபக்ச இடைத்தேர்தல் ஒன்றின் வழியாகப் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகிறார். டொன் அல்வின் ராஜபக்ச பெலியத்த தேர்தல் தொகுதியிலிருந்து தெரிவானார்.
1967, தந்தையின் மரணத்தைத் தொடர்ந்து 1970 ஆம் ஆண்டு பெலியத்தவில் வயதில் இளைய பாராளுமன்ற உறுப்பினரான மகிந்த தெரிவுசெய்யப்படுகின்றார். தனது 25 ஆவது வயதில் பாராளுமன்றத்திற்குள் நுளைந்த ராஜபக்ச என்ற சிங்கள பௌத்தப் பேரினவாதியான கத்தோலிக்கரின் தலைமையில் நடைபெற்ற இனப்படுகொலையில் சாரிசாரியாக மக்கள் கொலைசெய்யப்பட்டனர்.
இலங்கையை ஆட்சிசெய்த கொடூரமான சர்வாதிகாரியாக ராஜபக்ச கணிக்கப்படுகிறார். சிங்கள பௌத்த பேரினவாதத்தின் ஏகப்பிரதிநிதியாகத் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட ராஜபக்சவிற்கு போட்டியாக முளைத்துள்ள மற்றய புதியவர் மைத்திரிபால சிரிசேன. தேர்தல் கூட்டங்களில் தானும் ராஜபக்சவிற்கு இணையான பேரினவாதி என்பதைப் பல்வேறு வழிகளில் கூறிவருகிறார்.
http://www.srilankaguardian.org/2013/09/rajapakse-ancestry.html