தமிழ் மக்களின் மனித உரிமைகளை பாதுகாப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் தம்மாலான சகல முயற்சிகளையும் எடுக்கப்போவதாக ஜனாதிபதி உறுதியளிதுள்ளார் என பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் நிபுணர்கள் குழு பரிந்துரைகளை அமுல்படுத்துவது தொடர்பில் இலங்கை அரசாங்கம் சாதகமான பதிலை அளிக்கும் வரையில் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
லிபியாவில் மனித உரிமை மீறப்படுவதான மிகைப்படுத்தப்பட்ட பிரச்சரம் மேற்கொண்டு, அந்த நாட்டன் வழங்களைக் கொள்ளையிடுவதற்கக் ஆக்கிரமிப்பு நடத்த அனுமதி வழங்கிய அமரிக்க அமைப்பான ஐக்கிய நாடுகள் நிறுவனம் இனக் கொலையாளி மகிந்த ராஜபக்சவை நம்புவது வியப்பில்லை. ஆனால் ஐக்கிய நாடுகள் நிறுவனம் போன்ற சர்வதேச பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் அமைப்புக்கள் மீது நம்பிக்கை வைக்கக் கோரும் தமிழ் இனவதிகள் மக்கள் போராட்டத்தை அழிக்க முற்படுகிறார்கள்.