Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்சவுடன் இரவு விருந்தில் அசின்!

தென்னிந்திய திரைபட நடிகை அசின் இலங்கைச் சர்வாதிகாரி மகிந்த ராஜபக்சவுடன் இரவு விருந்துபசாரம் ஒன்றில் கலந்துகொள்ளும் ஒளிப்படம் இங்கு இணைக்கப்பட்டுள்ளது. அசின் மட்டுமல்ல புலம் பெயர் நாடுகளிலிருந்து சென்ற பலரும் கூட ராஜபக்ச குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதையும் விருந்துண்டதையும் இங்கு குறிப்பிடலாம். எது எவ்வாறாயினும் அசின் இலங்கைக்குச் சென்று வந்ததும் பின்பதாக இலங்கை அரசின் பிரச்சாரத்திற்கு அது பயன்படுத்தப்பட்டதையும் பலர் சுட்டிக்காட்டியிருந்தனர்.  சாரிசாரியாக மனிதப்படுகொலைகளை மேற்கொண்டுவிட்டு இன்னமும் ஆட்சியில் அமர்ந்திருக்கும் ராஜபக்ச குடும்பத்தினர், தம்மை ஜனநாயக வாதிகளாகக் காட்டிக்கொள்ளும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஒன்று தான் “சர்வதேசத்” தமிழ் எழுத்தாளர் மாநாடும் என்பது இங்கு கோடிட்டுக்காட்டத்தக்கது. தவிர, தென்னிந்திய சினிமா மோகத்தில் மூழ்கியிருக்கும் புலம் பெயர் தமிழர்களுக்கு ஈழத் தமிழர்கள் இழிவாகச் சித்தரிக்கும் கமலஹாசன், அசின் போன்றோரை மட்டுமல்ல மூன்றாம் தர தென்னிந்திய சினமாக் குப்பைகளையும் நிராகரிப்பார்கள் என நம்புவோமாக.

Exit mobile version