Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு : அரசியல் சாதனை

குறித்த காலத்திற்கு இரண்டு வருடங்கள் முன்னதாகவே ஜனாதிபதித் தேர்தலை நடாத்தும் ஒரேயொரு ஜனாதிபதி தானே தான் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்து வருகிறார். இப்போது இந்த நான்கு வருடங்களிலும் அவர் என்ன தான் செய்து வந்துள்ளார் என்ற விடயங்கள் அம்பலத்திற்கு வந்துள்ளன. இந்த அறிக்கையின்படி அவருடைய சராசரிச் செலவு 19 மில்லியன்கள்.

மகிந்த ராஜபக்சவின் கணக்கு வழக்கு விபரங்கள் வருமாறு:

 
ஹெட்ஜிங்  விவகாரம்: பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அஸந்த டி மெல் மகிந்த ராஜபக்சவின் மனைவி சிராந்தியின் உறவினர், இக்கொடுக்கல் வாங்கலில் இலங்கைக்கு 230 பில்லியன் ரூபாய்கள் நட்டமேற்பட்டது. புpன்னர் உயர் நீதிமன்ற நடவடிக்கை காரணமாக கூட்டுத்த தாபனத் தலைவர் அஷந்த பதவியிழந்தார். ஊயர்நீதிமன்றம் பெற்றோலை நூறு ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டது. ஏனினும் அதனையும் மீறி இப்போது பெற்றோல் 130 ரூபாவுக்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 
எயர்லங்காவின் நஷ்டம்: 2007 – 2008இல் எயர்லங்கா 1000 மில்லியன் (10 பில்லியன்) ரூபாய்களை இழந்தது. ஆதனுடைய தலைவர் நிசாந்த விக்ரமசிங்க. இவர் ஜனாதிபதியின் மனைவி சிராந்தியினுடைய சகோதரர். க.பொ.த சாதாரணம் சித்தியடைந்தவர்.
 
மிஹின் எயர்: இதற்கு 2007 ‐ 2008 வரவு செலவுத்திட்டத்தில் 4000 மில்லியன் (4 பில்லியன்) ஒதுக்கப்பட்டது. புதிய 2008 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் மேலும் ஆயிரம் மில்லியன்  ( 1 பில்லியன்) ஒதுக்கப்பட்டுள்ளது.)  இதனுடைய தலைமைப்பணிப்பாளர் மகிந்தவின் உறவினரான சஜின் வாஸ் குணவர்த்தன.  க.பொ.த சாதாரணம் சித்தியடைந்தவர்.
 
இரத்துச் செய்யப்பட்ட வீரவில விமானநிலையத் திட்டம்: ஆரம்பச் செலவுகள் 500 மில்லியன்.
மிக் போர் விமானக் கொள்வனவு: மகிந்தவின் மைத்துனரான உதய வீரதுங்க மேற்கொண்டது. ருஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவராக உள்ளார். க.பொ.த சாதாரணம் சித்தியடைந்தவர். 4 மிக் விமானங்களுக்கான கொள்வனவுச் செலவு 400 மில்லியன்.
 
லுங்கா லொஜிஸ்றிக் நிறுவனத்தூடாகக் கொள்வனவு செய்யப்பட்ட போர்த் தளபாடங்கள்: அதன் தலைமை நிர்வாகி ஜயந்த விக்ரமசிங்க. க.பொ.த சாதாரணம் சித்தியடைந்தவர்.மகிந்தவின் சகோதரி காந்தினியின் மருமகன் அக்குரஸ்ஸ பிளேஸ்இன் உரிமையாளர். இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்ரமசிங்கவின் சகோதரர்.
 
வற் மோசடி:  நாடு 35000 மில்லியனை ( 35 பில்லியனை) உள்நாட்டு இறைவரித் திணைக்களம் இழந்தது. நிதியமைச்சர் மகிந்த ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.
 
சபாரி இயற்கை வனாலயம் 16000 மில்லியன் ரூபாய்களில் (1.6 பில்லியன்) உருவாக்கப்பட்டது.
 
கெரவலபிட்டிய மின்நிலையம்: 400 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இதற்குச் செலவானது. ஊண்மையான அதன் செலவினம் 200 மில்லியன் அமெரிக் கடொலர்கள் மட்டுமே. 300 மெகா வற்ஸ்க்கு திட்டமிடப்பட்டு பின்னர் 200 மெகா வற்ஸே உருவாக்கப்பட்டது. மேலதிக இழப்புக்கள் நாளாந்தம் 70 மில்லியன் ரூபாய்கள் மின்சாரசபைக்கு இழப்பு ஏற்பட்டது.   வுரடாந்தம் 25500 மில்லியன் (25.5 பில்லியன், ஆரம்பத்தில் ஒரு யூனிட் 18 ரூபாவுக்குக் கொள்வனவு செய்வதாகத் தீர்மானிக்கப்பட்டது. துற்போது ஒரு யூனிட் 40 ரூபாயாக இருக்கிறது. மின்சார சபை ஒரு யூனிட்டுக்கு 22 ரூபாவை இழக்கிறது.
 
உமா ஓயா திட்டம்: அதன் மதிப்பீடு 265 மில்லியன் அமெரிக்க டொலர் ஆனால் பின்னர் 545 மில்லியன் அமெரிக்க டொலர்களை எடுத்துக் கொண்டது. 280 மில்லியன் அமெரிக்க டொலர்களை மேலதிகமாக எடுத்துக் கொண்டது. இதனுடைய அமைச்சர் சமல் ராஜபக்ச. ஜனாதிபதியின் சகோதரர்.
 
சுpராந்தியின் சகோதரரான டிலான் விக்ரமசிங்கவுடன் 16 மில்லியன் அnரிக்க டொலர்கள் பெறுமதியான ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. ஏல்லா பிரதேச செயலகங்களுக்கும் கொம்பியூட்டர்களை வழங்குவதற்காக. ஆனால் பிரதேச செயலகஙகளுக்கோ ரூபா ஐம்பதாயிரம் கூட பெறுமதியற்ற கம்பியூட்டர்களே வழங்கப்பட்டுள்ளன. அவற்றின் மொத்தப் பெறுமதி வெறும் 1.2 மில்லியன் மட்டுமே.
 
கொள்ளயைடிக்கப்பட்ட மற்றும் விரயம் செய்யப்பட்ட பணத்தின் பெறுமதி:
 
ஹெஜ்ட் உடன்படிக்கை – 230000 மில்லியன் . (230 பில்லியன்)
எயர்லங்கா – 10000மில்லியன் 10 பில்லியன்
மிஹின் எயர் ‐ 5000 மில்லியன் ( 5 பில்லியன்)
மிக் கொள்வனவு – 400 மில்லழியன் (4 பில்லியன்)
வீரவில விமான நிலையம் ‐ 500 மில்லியன் ( 0.5 பில்லியன்)
வற் மோசடி – 35000 மில்லியன் (35 பில்லியன்)
சபாரி பார்க்  – 16000 மில்லியன் (16 பில்லியன்)
கெரவலபிட்டிய – 23000 மில்லியன் (23 பில்லியன்)
உமா ஓயா – 28000 மில்லியன் (28 பில்லியன்)
பிரதேச செயலகங்களுக்கான கம்பியூட்டர்கள் 1200 மில்லியன் (1.2 பில்லியன்)
கிரேன் கொள்வனவு – 24150 மில்லியன் (24 பில்லியன்)
மேம்பாலம் கட்டும் ஒப்பந்தங்கள் 3500 மில்லியன் (3.5 பில்லியன்)
வடக்குவீதி அபிவிருத்தி 28000 மில்லியன் (2.8 பில்லியன்)
 
 
 
இந்தப் பணத்தைக் கொண்டு நாங்கள் என்னசெய்திருக்கலாம்?
 
எல்லா அரச பணியாளர்களுக்கு ஒரு வருட சம்பள உயர்வை வழங்கியிருக்கலாம். 126 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
கோல்டன் கீயில் வைப்புச் செய்தவர்களுக்கு அவர்களுடைய பணத்தை வழங்கியிருக்கலாம். 26 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
சுக்விதியில் முதலிட்டவர்களுக்கு அவர்களுடைய பணத்தை வழங்கியிருக்கலாம். 4 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
ஏனைய நிறுவனங்களில் முதலீடு செய்தவர்களுக்கு அவர்களுடைய பணத்தை வழங்கியிருக்கலாம் 10 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
ஓய்வூதியகாரர்களுக்கு அவர்களுடைய ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக அதிகரித்திருக்கலாம் 3 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும்.
ஓரு வருடத்திற்கு பால் மாவின் விலையை 50 வீதத்தால் குறைத்திருக்கலாம் 10 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
மீளவும் பாடசாலை மாணவர்களுக்கு சீருடையை வழங்கியிருக்கலாம் 5 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
ஏல்லா மதத் தாபனங்களுக்கும் மின்சாரத்தை இலவசமாக வழங்கியிருக்கலாம் 1 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
ஆடைத் தொழிற்சாலையில் வேலையிழந்டதவர்களுக்கு வாழ்க்கைச் செலவுப்படி வழங்கியிருக்கலாம் 36 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
சமுர்த்தி பெறும் 1427322 குடும்பங்களுக்கு மாதாந்தம் 200 ருபாய் மேலதிகமாக வழங்கியிருக்கலாம். 2850 மில்லியன் மாதாந்தம் தேவைப்பட்டிருக்கும் ஒரு வருடத்திற்கு 34.2 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும். 
 
விவசாயிகளுக்கு மானிய அடிப்படையில் உரம் வழங்கியிருக்கலாம் 10 பில்லியன் அதற்குத் தேவைப்பட்டிருக்கும்.
 
இவ்வளவும் சேர்த்து 290.2 பில்லியன். மீதமாக 140.1 பில்லியன் எஞ்சியிருக்கும் 
 
ராஜபக்ச குடும்பம் 4 வருடங்களில் நிகழ்த்திய சாதனை இது.

நன்றி : உலக  தமிழ் செய்திகள்

Exit mobile version