Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

மகிந்த ராஜபக்சவினால் பிரதம நீதியரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்

இலங்கையின் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்துள்ளதாக மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். பிரதம நீதியரசரை பதவி நீக்கம் செய்யும் வகையில் நாடாளுமன்றம் கடந்த வெள்ளிக்கிழமை அங்கீகாரம் வழங்கி அதனை இலங்கை ஜனாதிபதிக்கு அனுப்பிவைத்தது. இந்த அங்கீகார ஆவணத்தில் மஹிந்த ராஜபக்ச இன்று காலை கையெழுத்திட்டார். இதனையடுத்து அது தொடர்பான அறிவித்தல் சிராணி பண்டாரநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் பிரதம நீதியரசரான தம்மை பதவி விலக்கிய ஜனாதிபதியின் அறிவிப்பு சிராணி பண்டாரநாயக்கவுக்கு கிடைத்துள்ளதாக அவரின் சட்ட ஆலோசகர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
நீதித்துறையைச் சார்ந்த சட்டத்தரணிகள், நீதிபதிகள் உட்பட்ட அனைவரும் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க விவகாரத்தில் ஒருமித்த குரலில் மகிந்த ராஜபக்ச சர்வாதிகாரத்திற்கு எதிராக எதிர்ப்புப் போராட்டங்களை நடத்திவந்தனர். ராஜபக்ச அரசின் துணை இராணுவக் குழுக்கள் ஆர்பாட்டக்காரர்களை மிரட்டியும் தாக்குதல்களை நடத்தியும் வந்தன.
இலங்கை மக்கள் மத்தியில் பெரும் ஆதரவுபெற்ற தலைமை நீதிபதியை மகிந்த ராஜபக்சவின் பாசிச அரசு பதிவியிலிருந்து நீக்கியமை இலங்கையில் பெரும் எழுச்சிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version