
உலக நாடுகளின் உதவியோடு மகிந்த ராஜபக்ச வன்னியில் நடத்திய யுத்ததம் குறித்த சர்ச்சைகள், இன அழிப்பு தொடர்பான உலக மக்களின் எதிர்ப்பு ஆகியவற்றை மட்டுப்படுத்தவே இவ்வறிக்கை தயாரிக்கப்படுள்ளது.
2010 ஆம் அண்டு மே மாதம் 15 ஆம் திகதியன்று ஒரு வருட உத்தியோக பூர்வ காலத்துடன் நியமிக்கப்பட்ட மேற்படி குழு அதன் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு மேலும் 6 மாதங்கள் அவகாசம் பெற்று இம்மாதம் 15 ஆம் திகதியுடன் அதன் பணிகளை நிறைவு செய்துள்ளது.
மகிந்த குடும்பத்தின் எதிரிகள் எனக் கருதப்படும் இராணுவ அதிகாரிகள் மீது போர்க்குற்றம் சுமத்தப்படலாம் என எதிர்வுகூறப்படுகின்றது.