இலங்கையில் அடுத்து வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு பக்க்த்தில் இனக்கொலையாளியும் இதுவரை இலங்கையைச் சூறையாடி தண்டனைகளிலிருந்து தப்பியவருமான மகிந்த ராஜபக்சவும், மறு புறத்தில் அமெரிக்க – இந்திய அதிகாரங்களின் சோளக்காட்டுப் பொம்மை மைத்திரிபால சிரிசேனவும் நடத்திய இக் கேலிக்கூத்து இலங்கை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இன்றைய தசாப்தத்தின் மிகப்பெரும் குற்றவாளியான மகிந்த ராஜபக்ச போர் வெற்றியையும் சிங்கள பௌத்த தேசிய வெறியையும் முகமூடியாகக் கொண்டு நாட்டைச் சூறையாடினார். ‘நல்லாட்சி’ என்ற முகமூடியோடு அன்னிய நாடுகளின் கரங்களில் முழு இலங்கையையும் ஒப்படைக்கிறார் மைத்திரிபால சிரிசேன.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் அடியாள் ஜோன் கெரியின் இலங்கைப் பயணத்தின் பின் சில நாட்களுக்கு உள்ளாகவே இச்சந்திப்பு நடைபெற்றுள்ளது. இலங்கை முழுவதையும் அன்னிய நாடுகளுக்கு விலை பேசி விற்ற இருவரதும் சந்திப்பின் வெற்றியும் தோல்வியும் மக்களுக்கு நம்பிக்கையைம் பெற்றுத்தராது.